பக்கம்:தேன்மழை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிகளார் பேச்சு (புதுக்கோட்டையை அடுத்துள்ள கடியாப்பட்டியில் 26-11-55ல் நடைபெற்ற திருக்குறள் விழாவில், திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் கவிதைகளில் தரப்பட்டிருக்கிறது.) புகழ்கொண்ட தமிழ்நாட்டில் வாழ்ந்த முன்னோர் பொருளிட்டி அப்பொருளை யெல்லாம் மக்கள் தொகைகொண்ட இப்புவியில் தாங்கள் மட்டும் சுகிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டாரில்லை அகங்கொண்ட துயரத்தை முகத்திற் காட்டி அல்லலுற்ற மாந்தர்க்கும் வழங்கி வந்தார். பகைகொண்டால் சமுதாயம் சிதறிப் போகும் பணப்பையை மறைத்தாலும் தீமை தோன்றும். முன்னோர்போல் அறஞ்செய்வீர் அறநூல் கூறும் முத்திக்கு வித்திதுவேயாகும். முன்னர்த் தென்னாடு வழங்கிற்று. வழங்கும் மாந்தர் செத்தாலும் அவர்கீர்த்தி சாவ தில்லை. தன்வீடு வந்தொருவன் கேட்கும் போது தடையின்றி வழங்குவன் மேலோன் ஆவான். அன்றாடம் தலைவியிடம் தலைவன் காணும் அகைச்சுவையாம் அதனைவிட இன்பங் காண்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/166&oldid=926747" இலிருந்து மீள்விக்கப்பட்டது