உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை தலையில் வீழ்ந்ததால் தரையிற் சாய்ந்தனள், மிதக்கும் மேகமும் மின்னலும் சேர்ந்து தரையில் வீழும் தன்மையைப் போல! வீங்கிய தேங்காய் வீழ்ந்ததால் அந்தப் பெண்ணழகி புதிய புண்ணழகி யாயினள்! வாயி லிருந்தும் மலர்மூக்கி லிருந்தும் வழிந்தது. செந்நீர்! எழுந்தது கண்ணிர்! கண்னைவிட் டெழுந்த கண்ணிர் ஊர்வலம் கட்டாந் தரையைத் தொட்டு நின்றது. தெங்கம் பழத்தினால் பொன்னியின் அங்கத்தி லோர்தழும் பமைந்து விட்டதே! செய்தி : தினத்தந்தி (11-5-63)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/175&oldid=926756" இலிருந்து மீள்விக்கப்பட்டது