உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 வாழைப்பூ வேதாந்தம் மூலபலம் மிக்கவனாம் தெலுங்கு நாட்டின் முடிவேந்தன் கிருஷ்ணதேவ ராயன் என்பான் காலையிலே எழுந்தவுடன் தழும்பு பட்ட கட்டுடலில் நல்லெண்ணெய் பூசு வானாம்! போலிமதப் பித்தரிங்கே சிலைe தன்றோ பூசுகின்றார் நல்லெண்ணெய்? இவர்போன் றாரை நாலிரண்டு தலைமுறைநாம் விட்டு வைத்தால் நாட்டுமக்கள் நான்குகால் விலங்கே யாவர்! நெருஞ்சிமுள்ளை மெதுவாகத் தொட்டால் கையில் நிச்சயமாய்க் குத்திவிடும் காயம் செய்யும். கரங்களினால் நாமழுத்திப் பிடித்தோ மாயின் கட்டாயம் அந்நெருஞ்சி நொறுங்கிப் போகும். நெருப்பதனில் விழச்சொல்லி வற்பு றுத்தும் நீசரைநீர் எச்சரிக்கை செய்வீ ராயின் பெருங்கொடுமை நிச்சயமாய்த் தீரும்! தங்கள் பெயருமிந்தப் புவிமீது நிலைத்து நிற்கும்! பழி வந்தால் பயப்படுவர்மேலோர் வாட்டும் பசிவந்தால் பயப்படுவர் தாழ்ந்த மக்கள். மழைவந்தால் குயில்கலங்கும். துரையே தாங்கள், மழைபோலும் பசிபோலும் ஆவீ ராயின் இழைதந்த இடையுடையார் தம்மைத் தீயில் இழுத்தெறியும் கூட்டத்தார் அடங்கிப் போவர். குழைதொங்கும் மடவாரின் நிலையும் மாறும் குளிர்நதிபோல் நீண்டோடும் அவர்கள் வாழ்நாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/196&oldid=926777" இலிருந்து மீள்விக்கப்பட்டது