பக்கம்:தேன்மழை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலை அடிகள் (1876 - 1950) பலவோசை நிறைந்த காடன் பாடி' யிற் பிறந்த பிள்ளை விலையோசை கேட்டுக் கேட்டு வீணாகி வந்தோர் தம்மைக் கலையோசை கேட்க வைத்துக் கண்களைத் திறந்து விட்டார் மலைபேசக் கண்டோ மில்லை மறைமலை பேசக் கண்டோம் ! வேதத்தை மறைநூல்' என்றும் விவாகத்தை மன்றம்' என்றும் சாதத்தை வெண்சோ றென்றும் சபதத்தை 'ஆணை’ என்றும் மாதத்தைத் திங்கள் என்றும் மறைமலை ‘நம்சொல் லாக்கிச் சோதித்த பொன்னே போலும் தூயசெந் தமிழ்நூல் தந்தார் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/219&oldid=926800" இலிருந்து மீள்விக்கப்பட்டது