உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 232 பானையது வீழ்ந்துடைந்தால் அப்பா னைக்குள் பரவிநின்ற பழங்காற்றவ் விடத்தை விட்டு வானவெளி செல்வதில்லை; அதனைப் போன்று வைகுண்டம் எவர்மூச்சும் செல்வ தில்லை! தேனமைந்த தமிழ்மொழியை மூத்தோன் செய்த திருக்குறளைத் தென்னாட்டைச் சுற்றத் தாரை வானமுதப் பத்தினியை மறந்து நீயேன் மயானத்தின் கதைவளர்க்கச் சென்று விட்டாய்? அப்பரைப்போல் எண்பத்தோ ராண்டு வாழ்ந்தே அங்கத்தில் சுருக்கங்கள் பெற்றிட் டாலும் எப்பொழுதும் சுருங்காத பெருமை பெற்றாய். இடம்பெயரும் புகழ்பெற்றாய். உன்றன் கீர்த்தி முப்பொழுதும் தளராது! நிழலுக் கென்றும் முப்பிளமை ஏற்படுவ தில்லை யன்றோ! ஒப்புடையார் உவமேயம் போன்றோர் ஆவர். உத்தமனே நீயுவமை போன்றோன் ஆவாய்! வடமொழியில் செந்தமிழில் பழுத்தெ ழுந்த மறைமலைக்கும் பண்டிதமர் மணிக்கும் முன்பு குடங்குடமாய்க் கண்ணிரை வடித்தும் பின்னர்க் குயிலோசை திரு. வி. க. மறைந்த போது மடைதிறந்த வெள்ளம்போல் கண்ணிர் விட்டும் வாடிக்கொண் டிருக்கையிலே நீயும் உன்றன் கடையடைத்துக் கொண்டனையே சரியா? நாஞ்சில் கவிமணியே கலைவளர்ந்த மணியே அந்தோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/235&oldid=926816" இலிருந்து மீள்விக்கப்பட்டது