பக்கம்:தேன்மழை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் பெயரிடுங்கள் வயலிடுதல் கதிராகும்; கவிந்தி ருக்கும் வானிடுதல் எழுநிறங் கொண்ட வில்லாம் இயலிடுதல் பெரும்புலவர் செயற்கை யாகும் ஏரிடுதல் வயலுழவர் கடமை யாகும் புயலிடுதல் பருவத்தின் வேலை யாகும் புகழிடுதல் மேலோரின் நிகழ்ச்சி யாகும் மயிலிடுதல் ஒன்றுண்டாம் அதுதான் முட்டை மாந்தரிடல் முதன்முதலில் பெயரே யாகும் ! தாய்மொழியை வாய்மொழியால் அறியக் கூடும் தமிழ்ப்பற்றை அவர்பெயரால் அறியக் கூடும் தாய்மொழியை ஒதுக்கிவைத்துப் பிறநாட் டாரின் தழுவல்மொழிப் பெயரிட்டுக் கொளநி னைத்தல் தாய்ப்பாலை வேண்டாது நாய்ப்பால் உண்ணச் சம்மதிக்கும் தன்மையது போன்ற தாகும் வாய்மணக்கும் தமிழில்பெயரிடுவ தாலே வாய்வெந்து போய்விடுமோ? இட்டால் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/252&oldid=926833" இலிருந்து மீள்விக்கப்பட்டது