உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 56 மயில்துங்க வேங்கைமரம் இடங்கொ டுக்கும்; மதயானை தன்காலால் தினையி டிக்கும்; வயல்நீரை வரப்பெல்லாம் அளக்கும்; நாட்டின் வளத்தையெலாம் குறிஞ்சிநிலம் விளக்கும்; வண்ணக் குயில்பாதி, குரல்பாதி மகிழ்ச்சி யூட்டும். குறுமுயல்கள் நெல்லிக்காய் விழிகள் காட்டும், செயல்வீரம் புரிவதற்கு வேங்கை ஒடும்; தேனடையை மந்தியுண்டு மயங்கி யாடும். என்றென்றும் ஈவானைத் தேர்வே ளாயை, ஏந்திழையே! நீகாண வேண்டின், தெற்கே குன்றின்கண் விளையாடிக் கொல்லை முல்லைக் கொத்துக்கு முத்தமிட்டுப் பூவின் ஆவி என்கின்ற நறுமணத்தை எங்கும் வாரி இறைக்கின்ற தென்றலினால் உன்றன் கூந்தல், மின்கொண்ட முகில்கண்டு மயிலின் தோகை விரிவதுபோல் விரிந்தசையச் செல்க" என்றாள். மூலம் : புறநானூறு (133) மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற் கேட்பி னல்லது காண்பறி யலையே காண்டல் வேண்டினை யாயின் மாண்டநின் விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக் கலவ மஞ்ஞையிற் காண்வர வியலி மாரி யணன் வண்மைத் தேர்வே ளாயைக் காணியே சென்மே! உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/58&oldid=926873" இலிருந்து மீள்விக்கப்பட்டது