பக்கம்:தேன்மழை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தரர்ச் சாம்பல் இந்தியரே! எச்சரிக்கை இதனைக் கேளிர் - இரண்டாவ தலக்சாண்டார் நான்தான், உங்கள் தந்திரமோ மந்திரமோ தவமோ என்னைத் தடுப்பதற்கு முடியாது! பிறந்த நாட்டில் பந்தடித்தேன்; பாய்ந்தடித்தேன் பலரை; வாழைப் பழம்போன்று வடநாட்டை விழுங்கு தற்கு வந்திருக்கும் எனைநீங்கள் எதிர்ப்பி ராயின் மறுநாளின் உதயத்தைக் காண மாட்டீர்! பலாக்காட்டில், நிழல்தனிலே குட்டியோடு - படுத்துறங்கும் வரிவேங்கைப் புலியின் வாலை மிலாரென்று தவறாக எண்ணிக் கொண்டு மிதிக்காதீர் குதிக்காதீர் குதித்தால் கொல்வேன் சலாலுத்தின் கில்ஜியென்பான் முதலில் வந்து சந்தித்தான் சாதித்தான் அதற்குப் பின்னர் அலாவுத்தின் வந்துள்ளேன் என்றே நாட்டில் அனைவரையும் அதட்டியவன் அல்லா வுத்தீன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/68&oldid=926883" இலிருந்து மீள்விக்கப்பட்டது