உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 88 வெடித்திருந்த வயலெல்லாம் தண்ணி ராலே மெய்யெழுத்தின் முன்னுயிர்போல் பொருந்திக் கொள்ள தொடிப்புழுதி எருவிட்ட வயலில் ஏரின் துணைகொண்டு தொழிலுழவர் வேலை செய்தார். படிப்படியாய் வெயிலேறச் சேறு செய்தோர் பலர்தலையில் சூடேறக் 567- குப்பன் தடித்ததொரு மரத்தின்கீழ் வந்த மர்ந்தான். தையானும் மெய்யானும் ஆங்கே வந்தார். ஊருக்கும் உலகுக்கும் வாழ்வ ளிக்கும் உழவரெல்லாம் வாய்ப்பேச்சை வளர்க்கலானார். ஈரத்தின் வரலாறே மேக மாகும். ஏருழவின் வரலாறே வைய மாகும். பாருக்குச் சோறளித்துப் பாது காக்கும் - பயிர்த்தொழிலே உயிர்த்தொழிலாம் என்று வீர குரப்பன் விரிவாக விளக்கிக் கூறித் தொண்டைக்கு நீர்பாய்ச்சிக் கொண்டி ருந்தான். உழவனுக்கே நிலம்சொந்தம் என்றி ருந்தால் உலகத்தில் நமைப்போன்ற உழவ ரெல்லாம் அழுபவர்கள் ஆவோமோ? ஒருகூட்டத்தார் அனுபவிப்போர் ஆவாரோ? எறிந்த கல்போல் விழுபவர்கள் ஆவோமோ? ஏய்ப்போர் நம்மை மிதிப்பாரோ படித்துறைப்போல் என்றான் எட்டி, முழுவுரிமை பெற்றாக வேண்டும் இன்றேல் முன்னேற்றம் முயற்கொம்பே' என்றான் ஏவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/91&oldid=926906" இலிருந்து மீள்விக்கப்பட்டது