உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 94 போர்வீரன் ஊர்திரும்பி வருதல் போலும் புதுவெள்ளம் புரண்டெழுந்து வருதல் போலும் ஊர்நோக்கி விரைந்தோடி இல்லம் வந்தான். ஒவியத்தைப் போன்றவளோ அவனை நோக்கி நீர்வேண்டு மா?என்று கேட்க, "கண்ணே நீரெதற்கு? நீயன்றோ வேண்டும்! உன்னைப் பார்பார்பார் என்விழியில்" என்று கூறிப் பழத்தோடு பழஞ்சேர்த்துச் செந்தேன் சாய்த்தான். சுட்டாகி வினாவாகி எச்ச மாகித் தொகையாகித் தொடராகி ஆங்கே நின்ற கட்டாணி முத்தழகி அவனை நோக்கிக் "காதலரே! யானுங்கள் கைகளுக்கே எட்டாத கனியாக இருந்தி ருந்தால் இப்படியா என் கன்னம் சிவக்கும்" என்றாள். பட்டாளப் பயிற்சிபெற்ற செவ்வேள், வாழைப் பழத்தோட்டம் போன்றவளைக் கூர்ந்து நோக்கி. பட்டாடை கட்டிகொண் டிருக்கும் நல்ல பால்நிலவே! இளவேனிற் பூவே! உன்னைத் தொட்டாலும் கைமணக்கும் உன்றன் பேரைச் சொன்னாலும் வாய்மணக்கும்; ஆனும் பெண்ணும் ஒட்டாமல் உறவில்லை கலப்பே யின்றி உலகத்தில் தனிப்பொருளாய் ஏது மில்லை வெட்டாமல் குளம் வருமோ? வயலில் நெல்லை விதைக்காமல் முளைத்திடுமோ? என்றான் செவ்வேள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/97&oldid=926912" இலிருந்து மீள்விக்கப்பட்டது