பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

கூறுகிறவர்கள் எவ்வளவு நாற்றம் பிடித்த தடிப்பேறிய சந்தர்ப்பவாதிகள் என்பதை இன்றைய அவர்களது நடைமுறை திட்டவட்டமாக எடுத்துக் காட்டுகின்றது.

தேவிகுளம்—பீர்மேடுப் பிரச்னையில், காங்கிரஸ், தி.த.நா. காங்கிரஸ், தமிழரசுக் கழகம், தி.க., தி.மு.க. முதலிய கட்சிகள், ஸ்தாபனங்களின் நிலைகள் எவை? அவை சுமுகத் தீர்வுக்கு ஏற்றவைதாமா? அல்லது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிற 'உத்தமத் தலைவர்களின்' அரசியல் சூதாட்டப் பேரார்ப்பாட்டங்களா? இந்தப் பிரச்னையில் மக்களை ஆசைகாட்டி மோசம் போக்குகிறவர்கள் யார்? குழப்படிக்காரர்கள் யார் ? "வெட்டொன்று துண்டிரண்டு" என்ற வாதம் இந்தப் பிரச்னையைப் பொறுத்தமட்டில், அரசியல் நிதானத்திற்கோ, நடைமுறைப் பைசலுக்கோ பொருந்துமா?

காங்கிரஸ்

காங்கிரஸ், எங்களைப்போல், மொழிவழி ராஜ்யக் கொள்கையை ஒப்புக்கொள்ளவில்லை. தார் கமிஷன் ரிப்போர்ட், ஜே.வி.பி.க் குழு ரிப்போர்ட், ஹைதராபாத் காங்கிரஸில் தலைவர்கள் பேச்சு ஆகியவை காங்கிரஸின் மொழிவழி ராஜ்ய எதிர்ப்பை நன்கு புலப்படுத்துகின்றன. காமராசரும் கக்கனாரும்கூட கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரையில், "தேசீய ஒற்றுமை"யை உயர்த்திப் பிடித்து மொழிவழி ராஜ்ய வாதத்தை எதிர்த்து நின்றார்கள் என்பதைத் தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

பசல் அலிக் குழுவும், காங்கிரஸ் கொள்கையைப் பின்பற்றித்தான் 'ஒரு மொழி ஒரு ராஜ்யம்' என்ற கொள்கையை நிராகரித்து, பொருளாதார சுயதேவைப் பூர்த்தியை முக்கிய கொள்கையாகக் கொண்டு இந்திய யூனியனை பதினாறு ராஜ்யங்களாகச் சீரமைக்க வேண்டுமென்று காரணம் காட்டிச் சிபார்சு செய்திருக்கிறது.

செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைமை, குறிப்பாக மொழிவழி ராஜ்ய எதிரிகளாயினும், தலைமையில் ஒரு பகுதியும் காங்கிரஸ் அணிகளும் காங்கிரஸ் மக்களும் பொதுவாக மொழிவழி ராஜ்ய வாதிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

இனிக் காங்கிரஸின் நிலையை, தேவிகுளம்-பீர்மேட்டில் வைத்துப் பார்ப்போம். நிதி அமைச்சர் சுப்பிரமணியம், சட்டசபையில் மொழிவாரிப் புள்ளி விவரங்களை சரமாரியாக அள்ளிவீசி, பிரச்னையை அக்குவேறு ஆணிவேறாக அலசிக் காட்டி, தேவிகுளம்-பீர்மேடு தமிழ்ப் பிரதேசம்தான் என்றும், அது சென்னை ராஜ்யத்தோடு சேர்வதுதான் நியாயமென்றும், கேரளத்தோடு அப்பிரதேசம் இணைந்துநிற்கவேண்டுமென்று சீரமைப்புக் கமிஷன் சிபார்சு செய்திருப்பது சிந்திக்கக்கூடாத அநியாயமென்றும் தமிழர் 'நியாயத்