பக்கம்:தேவிக்குளம்-பீர்மேடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

வாழ்கிறார்கள், வாழ்வார்கள்" என்றும் எனவே தேவிகுளம்-பீர்மேடு கேரளத்திலேயே இருக்கவேண்டுமென்றும் வழக்காடுகிறார். இந்த இரண்டு வக்கீல்-அமைச்சர்களின் மனப்பாங்கு வேறு, கூடலூர், தேவிகுளம்-பீர்மேட்டிலுள்ள மலையாளிகள், தமிழர்களின் மனப்பாங்கு வேறு.

கேரள மக்கள் சுப்ரமணியத்தின் பேச்சையும், தமிழ் மக்கள் பனம்பள்ளியின் பேச்சையும் 'சதிகாரத்தனம்' என்று எண்ணுகிறார்கள். பகைமை அலை மோதி அடிக்கிறது. இவர்களால் பிரச்னை எவ்வாறு பைசலாகும்! தேசீய ஒற்றுமை எவ்வாறு ஏற்பட முடியும்!

சந்தர்ப்பவாதம்

இரண்டு அமைச்சர்களும் காங்கிரஸ்காரர்கள். இரண்டு பேரும் மொழிக்கு முதலிடம் கொடுக்கவில்லை. லாபத்திற்காக மட்டும் மொழிவாரிக் கொள்கையை சந்தர்ப்பவாதமாகப் பேசுகிறார்கள். சுப்ரமணியம் சென்னை ராஜ்யத்தின் சுயதேவைப் பூர்த்தியையும் பனம்பள்ளி கேரள ராஜ்யத்தின் சுயதேவைப் பூர்த்தியையும் பெரு நோக்காகக் கொண்டு, ராஜ்ய-எல்லை அமைப்பில் எதிரும் புதிருமாக நின்று மோதுகிறார்கள். காங்கிரஸ் கொள்கையும் கமிஷன் சிபார்சும் சுய தேவைப் பூர்த்தியைத்தான் அதிகமாக வற்புறுத்துகின்றன. ஆகவே மக்களிடையில் - தமிழ், மலையாள மக்கள் இருவர்களிடையிலும்-குழப்பத்தையும் பகைமையையும் வளர்ப்பது ராஜ்ய சீரமைப்பு பற்றிய காங்கிரஸ் கொள்கைதான். காங்கிரஸ் தலைமை சந்தர்ப்பவாதப் போக்கில் மொழிவழி பேசுவதுதான்.

மொழிவழி பேசி, தேவிகுளம்- பீர்மேடு கோருகிற சுப்ரமணியம், மொழியைமட்டும் தனி அளவுகோலாகக் கொள்ளமுடியாது' என்று அடுத்த மூச்சில் காங்கிரஸ் கொள்கையை நினைவூட்டுகிறார். உடனே "சுயதேவைப் பூர்த்தி என்ற காங்கிரஸ் கொள்கையை உறுதியாகப் பிடித்துக்கொண்டு பனம்பள்ளி "தேவிகுளம்-பீர்மேடு கேரளத்தின் உயிர்நாடி, தேவிகுளம்-பிர்மேடு போனால் கேரளம் போச்சு " என்று அலறுகிறார். பொதுவாகத் தமிழ்மக்களும், குறிப்பாக தேவிகுளம். பீர்மேட்டுத் தமிழ் மக்களும் காங்கிரஸ் கொள்கையின் ஆபத்தையும் அது உருவாக்கியுள்ள சிக்கலின் அபாயத்தையும் நிதானமாக உணர்ந்து பார்க்கவேண்டுமென்று நாங்கள் சொல்கிறோம்.

நீதி கிடைக்குமா?

பண்டித ஜவஹர்லால் நேருவும், கோவிந்த வல்லப பந்தும், தேசீய ஒற்றுமையையும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மிக முக்யத்வத்தையும் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து, ராஜ்யச் சீரமைப்பு விஷயத்தில், தங்களுடைய முடிவை அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றும், இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்-