உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடிகை அக்காரக்கனி 94


எம்பெருமான் ‘மருத்துவனாய் வந்த மாமணி வண்ணன்’ என்பதை நாம் அறிவோம். அங்ஙனமே, சிறிய திருவடியும் மக்கள் பிணிதீர்க்கும் மருத்துவனாக நின்று பெரும்புகழ் பெற்றுள்ளார். பில்லி, சூனியம், பிணி, பிசாசம், ஏவல், தீராத நோய், பைத்தியம், மக்கட்பேறின்மை இவற்றால் பீடிக்கப்பெற்ற வர்கள் மலையின் மீதுள்ள அநுமந்த தீர்த்தத்தில் நீராடி அஞ்சநேயர் சந்தியை அடைந்துவிட்டால் போதும். ஏதோ சிறிது நேரம் ஆட்டம் போட்டாலும் அதன்பின் அமைதியாக உறங்கி விடுகின்றனர். உறங்கி எழுந்தால் பிணியும் நோயும் ‘தீயினில் தூசுபோல்’ மறைந்து விடுகின்றன. பற்றியிருக்கும் பேயும், பிசாசும் பெண்களைவிட்டு இறங்கி மலையைவிட்டே ஓடிவிடு கின்றன. நாடோறும் இத்தகைய பல நோயாளிகள், பெரும் பாலும் பெண்கள், இங்கு வந்து இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், அநுமந்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் (தக்கான் குளம்) முதலிய திருக்குளங்களில் நீராடி நியமங்களை அனுட்டிப்பதை இன்றும் நாம் காணலாம்.


பெரிய மலையிலுள்ள யோகநரசிம்மரும் சின்னமலை யிலுள்ள யோக ஆஞ்சநேயரும் நல்ல சிற்ப வடிவங்கள்; இவர்கள் இருவரும் மூலவர்களே. இன்னும் இவர்கள் செப்புச் சிலை வடிவில் உற்சவர்களாக உருவாகவில்லை. ஆதலால் உற்சங்கள் யாவும் சோழசிங்கபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பக்தவத் சலருக்கே நடைபெறுகின்றன. இந்த எம்பெருமான் பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார் இவர்களுடன் போகநிலையில் எழுந்தருளியுள்ளார். இந்தத் திவ்விய தேசத்தில் ‘யோகமும் போகமும் ஒன்றிய நிலையில்’ எம்பெருமான்களைச் சேவிக்கும் பேறு பெறுவதில் உண்மையிலேயே ஒரு சிறப்பாகும்.


இந்தக் கோயிலின் அமைப்பு முறைகளையும், வேலைப் பாடுகளையும் கூர்ந்து நோக்கினால் இது நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. விரிவான வெளிப் பிராகாரங்கள், மண்டபங்கள்முதலியன எல்லாம் இக்கோவிலில் அமைந்துள்ளன. ஆண்டில் பன்னிரண்டு மாதங்களிலும் ஏதோ ஒரு திருவிழா இத்தலத்தில் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இவையாவும் நடைபெறுவதற்குப் பல்வேறு தனியார் கட்டளைகள் உள்ளன. பெரிய மலையிலுள்ள தாயாருக்கு வெள்ளிக்கிழமைகள் தோறும் பஞ்சாமிர்தத் திருமஞ்சனம் நடைபெறும். கார்த்திகை மாதத்தில் பக்த கோடிகள்