உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வுள் கிடக்கும் பெருமலை 105

‘பூபாலராயர்’ என் வழங்கப்பெறும் எவ்வுள் கிடந்தான்.தமது சிறிய திருமேனியுடன் சேவை சாதிக்கின்றார். இவருக்குத்தான் நாடோறும் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. இவருக்கு அருகில்வடிவழகில் ஒப்பு:உயர்வு அற்ற வீரராகவன் (உற்சவர்) உபய நாய்ச்சிமாருடன் சேவை சாதிக்கின்றார். இவரை அலங்கார பீடத்திலிருந்து திருமுடிவரை சேவித்த மாத்திரத்திலேயே நம் தீவினைகள் யாவும் தீயினில் துாசுபோல்’ நாசமடைந்துவிடும். மேலும், நாடோறும் பலிசாதிக்க எழுந்தருளும் மணவாளன், கண்ணன், சாளக்கிராம மூர்த்திகள் ஆகியோர்களும் அங்கு எழுந்தருளியுள்ளனர். அவர்களையெல்லாம் சேவித்து வெளியே வருங்கால் திருவெண்ணாழிப் பிரதட்சினத்தில் தென் மேற்கில் இலக்குமி நரசிம்மர் சந்நிதியும், வடமேற்கில் சக்கரத்தாழ்வான் சந்நிதியும் தென்படுகின்றன்.

அடுத்து, வெளிப்பிராகாரத்திற்கு வருங்கால பெருமாள் சந்நிதிக்குத் தெற்குப் பகுதியிலுள்ள கனகவல்லித் தாயார் சந்நிதியை அடைகின்றோம். அவரை வழிபட்டு அவருக்கு அருகில், முன்புறமாக இரண்டு யானைகளுடன் கூடிய பது மபிடத்தில் எழுந்தருளியிருக்கும் எல்லா அணிகளுடன் கூடிய தாயார் உற்சவரையும் கண்டு வழிபடுகின்றோம். தாயார் சந்நிதியின் அருகில் வரையப்பெற்றிருக்கும் திருப்பாவை ஒவியங்களையும் கண்டு மகிழ்கின்றோம். தாயார் சந்நிதியின் பின்புறத்தில் ஒவிய வேலைப்பாடுகள் நிறைந்த நான்கு கற்றுண்கள் தாங்கும் ‘வெள்ளிக்கிழமை மண்டபம்’ அமைக்கப் பெற்றுள்ளதையும் கண்டு களிக்கிறோம்.

பிராகாரத்தின் பின்புறத்தில் இராமன், வேணு கோபாலன், தேசிகன், நம்மாழ்வார், ஆண்டாள் இவர்கள் சந்நிதிகளும், வடக்குப் பக்கத்தில் பெருமாள் திருவடி மண்டபமும் உள்ளன. பக்தர்கள் பிரார்த்தனையாக உப்பையும் மிளகையும் சேர்ப் பதைத் திருவடிமண்டபத்தில் காண்கின்றோம். இப்பக்கத்தி லேயே திருக்கச்சி நம்பிகள், பாஷ்யக்காரர், விஷ்வக்சேனர் இவர்கள் சந்நிதிகளும், மிகவும் விசாலமான பவித்திர உற்சவ மண்டபம், வாகன மண்டபம், கண்ணாடி அறை இவையும் இருப்பதைக் காண்கின்றோம். வடகலை ஐதிகத்தைச் சார்ந்த இத் திருக்கோயிலை அகோபில மடத்தினர் கண் காணித்து வருகின்றனர்.