உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

தான் துணை செய்தவாகக் கூறுகின்றனர். புண்டரீகர் அதற்கிசைந்து உணவும் கொணர்வதற்கு ஊருக்குள் செல்கின்றனர். திரும்பி வந்து பார்க்கும்போது வயோதிகர் கூராழிவெண் சங்கு தரித்த கோலத்துடன் தரையில் படுத்துக் கிடக்கின்றார். கடல் நீரும் வற்றியுள்ளது. பாற்கடலுக்கும் வழி திறக்கப்பெற்றுள்ளது. புண்டரீகருக்குச் சேவை சாதிப்பதற் காகவே பரந்தாமன் இந்தக் கோலத்தில் எழுந்தருளியுள்ளான். அம்முனிவரின் வேண்டு கோளின்படி அவர் உகந்த தலசயனனாகவே என்றும் மக்களுக்குச் சேவை சாதித்து வருகின்றான். தலசயனன் உகந்தருளின இடம் தலசயனம்’ என்ற பெயராலும் வழங்கி வருகின்றது.

அர்ச்சையில் எம்பெருமானைக் காணும் திருமங்கையாழ் வாருக்கு எம்பெருமானின் வியூக விபவாவதார வீரச் செயல்கள் பலவற்றைத் திருவுள்ளங்கொண்டு அவரது பெருமைக் குணத்தில் தம் மனத்தை ஈடுபடுத்துகின்றார். பெரும்பாலும் கண்ணனின் வீரசெயல்களே அவரது திருவுள்ளத்தில் ஒரு சேரத் தோன்றி குமிழியிடத் தொடங்குகின்றன. அவற்றைப் பாசுரங்களாகப் பேசி இனியராகின்றார். திருக்கடல் மல்லைப் பெருமான் பாலனாய் ஏழுலகுண்டு உமிழ்ந்தவன்; பாற்கடலில் துயில் அமர்ந்து பல்வேறு செயல்களைக் கவனிப்பவன், கடும்பரிமேல் கற்கியாக வரப்போகின்றவன்; வளை மருப்பின் ஏனமாகிப் பாரிடத்தை எயிறுகீற இடந்தவன்; இரு நிலனும் பெருவிசும்பும் இரண்டடிகளுக்குப் போதாவென்று அளந்து கண்டவன்; இலங்கையிலுள்ள வலியரக்கர் பெருவரைத்தோள் இறும்படி நெரித்தவன்; மாயமான் மாயப் பின்தொடர்ந்தவன்; அணிகள் பூண்ட அவுணர்கோனின் ஆகத்தைப் பிறை எயிற்று அடல் அரியாய் நின்று பிளந்தெறிந்த பெம்மான்; பெண்ணாகி இன்னமுதம் வஞ்சித்து அரக்கர்கள் உண்ணாதபடி செய்தவன்; கசேந்திரனுடைய இடர் களைந்தவன். இந்த எம்பெருமானே திருநின்றவூர் நித்திலமாக இருப்பவன், தஞ்சை மாமணிக் கோயிலில் எழுந்தருளியிருப்பவன்; தண் ஆர்ந்த வார்புனல் சூழ்திருமெய்யத் தடவரை மேல் பனங்கள்மேவிக் கிடக்

4. பிரும்மாண்ட புராணத்தில் இவ்வரலாற்றைப் பரக்கக் காணலாம்.