உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவயிந்திரபுரத்துத் தெய்வ நாயகன் 187

நல்வினையொழிந்த மாத்திரத்தில் நசிக்கும் தன்மையுடைய தேவர்கள் தாங்கள் நற்பேறு பெறும்பொருட்டு வணங்குவர் என்று திருமாலடியார்களின் மேன்மையை அறிகின்றோம். தீர்த்தம், திருத்துழாய் பெற்று சடகோபம் சாதிக்கப்பெற்று மனஅமைதி பெற்ற நிலையில் கருவறை யினின்றும் வெளிவருகின்றோம்.

பார்த்தன் தலயாத்திரை வந்தபொழுது ‘நேமிக்கையாளன், அயிந்தபுரமும் கண்டு கை தொழுதான்’ என்று இத்திவ்விய தேசத்திற்கு வந்து பார்த்தன் வணங்கியதாக வில்லிபுத்துராழ்வார்

குறிப்பிட்டுள்ளதும் நம் நினைவிற்கு வருகின்றது.

இந்தத் திவ்விய தேசத்தில் வேதாந்த தேசிகனுக்கு ஒரு பெரிய சந்நிதி உள்ளது. இளமையில் இந்த சுவாமி இங்கு வாழ்ந்தமைக்குச் சுவாமியின் திருமாளிகையும் திருக்கிணறும் சான்றுகளாக நிற்கின்றன. திருக்கோயிலுக்கு அருகிலுள்ள ஒளவுதாத்திரியில் (மருத்து மலையில்)” பெரிய திருவடியும் ஹயக்கிரீவனும் சுவாமிக்கு நேரில் காட்சி தந்ததாக வரலாறு. ஆகவே, ஹக்கிரீவன் ‘ஸ்வயம் வியத்தமான’ (தாமே தோன்றிய) திவ்விய தேசமாகின்றது. இத்தலத்து எம்பெருமான்மீது தேசிகன் வடமொழியில் தேவ நாயக பஞ்சாசத்’, ‘அச்யுத சதகம்’ என்ற இரண்டு நூல்களையும், தமிழில் மும்மணிக் கோவை, பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல், நவமணி மாலை ஆகிய ஏழுசிற்றலக் கியங்களையும் அருளியுள்ளார். இதனை,

‘அந்தமில்சீர் அயிந்தைநகர் அமர்த்த நாதன்

அடியிணைமேல் அடியுரையில் ஐம்பது ஏத்திச் சிந்தைகவர் பிராகிருத நூறு கூறிச்

செழுந்தமிழ்மும் மணிக்கோவை செறியச் சேர்த்துப் பந்துகழல் அம்மானை ஊசல் ஏசல்

பரவுநவ மணிமாலை இவையும் சொன்னேன் முந்தைமறை மொழியவழி மொழிநீ என்று

முகுந்தன் அருள் தந்தபயன் பெற்றேன் நானே.

  1. $35

33. வில்லிபாரதம் - ஆதிபர்வம் - அர்ச்சுன்ன தீர்த்த யாத்திரை - 17.

34. அதுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து இலங்கையை நோக்கி வந்த காலத்தில் ஒரு சிகரம் முறித்து விழுந்ததாகவும், அதுவே இம்மலை என்பதாகவும் ஐதிகம்.

35. தேசி. பிரபந் 366.