உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

மானுடைய அவதாரங்கள் யாவும் மெய்யானவை; இந்திரசாலம் போல் மயக்குபவை அல்ல. எம்பெருமான் தனக்கேயுரிய இயல்புகளனைத்தையும் அவதார காலத்திலும் கொண்டிருக் கின்றான். அவதார காலத்திலும் அவனுடைய திருமேனி இராஜஸ்தாமஸ் குணங்களின் சம்பந்தமே இல்லாது சுத்த சத்துவமாக இருக்கின்றது. எம்பெருமான் இக்கர்ம பூமியில் அவதரிப்பதற்கு அவனது சங்கல்பமேயன்றிக் கர்மம் காரணம் அன்று. பூமியில் தர்மம் குன்றி அதர்மம் தலையெடுக்கும் பொழுது எம்பெருமான் அவ்வக்காலத் தேவைக்கேற்றவாறு அவதாரங்களை மேற்கொள்ளுகின்றான். சாதுக்களை இரட்சிப் பதே அவதாரத்தின் முக்கிய பலனாக அமைகின்றது.

இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் இப்பதிகத்தின் பல சுருதிப் பாசுரத்தைச் சிந்திக்கின்றோம்.

“கலிகன்றி குன்றாது உரைத்த சீர்மன்னு செந்தமிழ் மாலைவல்லார்

திருமாமகள் தன்னருளால் உலகில் தேர்மன்ன ராய்ஒலி மாகடல்சூழ்

செழுநீர் உலகாண்டுள திகழ்வர்களே”

(கலிகன்றி-திருமங்கையாழ்வார்; குன்றாது-இலக்கண வழுவின்றி, சீர்மன்னு - அழகு பொருந்திய திருமாமகள்-பெரிய பிராட்டியார், அருள்-கிருபை, ஒலி மாகடல் - ஆரவாரிக்கும் பெரிய கடல்; நீர்-நீர்மை.)

என்ற பாசுரப் பகுதியால் பெரிய பிராட்டியாரின் திருவருளுக்கு இலக்காகி இவ்வுலகினை அரசாளவல்ல மன்னர் மன்னர்களாகி விளங்குவார்கள் என்பதனை அறிகின்றோம். இலக்குமியின் திருவருள் இன்னது என்பதை மேலே விளக்கிக் கூறியுள்ள தனையும் சிந்திக்கின்றோம்.

பக்தி உணர்வு கிளர்ந்தெழுந்த வண்ணம் பரமபதத்தில் வீற்றிருப்பது போன்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கும் பரமபத நாதனையும் வைகுந்தவல்லித் தாயாரையும் வணங்குகின்றோம். திருமங்கை யாழ்வார் அருளியுள்ள பத்துப் பாசுரங்களையும் அவன் சந்நிதியில் மிடற்றொலி கொண்டு ஒதி உளங்கரைகின்றோம். இந்நிலையில் திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் பாசுரம் நினைவுக்கு வருகின்றது.

23. பெரி. திரு . 2.9:10,