பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா த }

தானமாகக் கொடுப்பது. பிரசாபத்தியமாவது, மகட்கோடற்குரிய கோத்திரத்தார் மகள் வேண்டியவழி இருமுது குரவரும் இயைந்து கொடுப்பது. ஆரிடமாவது, ஒன்றானும் இரண்டானும் ஆவும்ஆனேறும் வாங்கிக்கொடுப்பது." தெய்வமாவது, வேள்விக்கு ஆசிரியராய் நின்றார் பலருள்ளும் ஒருவற்கு வேள்வித்தி முன்னர்க் கொடுப்பது. காந்திருவமாவது ஒத்த இருவர் தாமே கூடுங்கூட்டம். அசுரமாவது, வில்லேற்றினானாதல் திரிபன்றி யெய்தானாதல் கோடற்குரியனெனக் கூறியவழி அது செய்தாற்குக் கொடுத்தல். இராக்கதமாவது, தலை மகள்தன்னினும்தமரினும் பெறாதுவலிதிற்கொள்வது. பைசாசமாவது, களித்தார்மாட்டுந் துயின்றார்.மாட்டுங் கூடுதல்.

'அறனிலை ஒப்பே பொருள்கோள் தெய்வம்

யாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே இராக்கதம் பேய் நிலை என்றிக் கூறிய மறையோர் மன்றல் எட்டவை அவற்றுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் புணர்ப்பினதன் பொருண்மை என்மனார் புலமை யோரே'

என்பதனாலுங்கொள்க.துறையமை நல்யாழ்த் துணைமையோராவார் கந்திருவர். அவர் இருவராகித் திரிதலின் துணைமையோர் என்றார். துணையன்பாவது அவர் ஒழுகலாறோடொத்து மக்கண்மாட்டு நிகழ்வது. ஈண்டுக் காமக்கூட்டமென ஒதப்பட்டது மணவிகற்பமாகிய எட்டனுள்ளுங் கந்திருவமென்றவாறு. மாலைசூட்டல் யாதனுள் அடங்குமெனின், அதுவும் ஒத்த அன்பினராய் நிகழ்தலிற் கந்திருவப் பாற்படும். .

அறனும் பொருளும் இன்பமும் என்னாது, இன்பமும் பொருளும் அறனும் என்றது என்னை எனின், பலவகை உயிர்கட்கும் வரும் இன்பம் இருவகைப்படும். அவையாவன : போ கம் நுகர்தலும் வீடுபெறுதலும் என. அவற்றுள் வீடுபேறு துறவறத்தில் நின்றார்க்

1. ஒன்றானும் இரண்டானும்-ஒன்றாயினும் இரண்டாயினும்.

ஆ - பசி, ஆணேறு - எருது,

2. துணையன்பாவது என அச்சுப் புத்தகத்திற் காணப்படும் தொடர், துணைமையோரியல்பாவது என்றிருத்தல் வேண்டும். துணைமையோர் - ஒப்புடைய இருவர். அவர்தம் இயல் பாவது, ஒருவரையொருவர் எதிர்ப்பட்ட முதற்

காட்சியிலேயே வேட்கையால் உள்ளம் ஒத்துக்ககூடுதல்.