பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ట్ట, శ్రీ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

தலும், உண்ணாமையால் உண்டாகும். உடல்மெலிவும், தமக்கு ஆக்கம்ாவன இவையெனத் தமக்குள்ளே கூறிக்கொள்ளுதலும், நாணத்தின் எல்லை கடத்தலும், காண்பன்வெல்லாம் தம்மாற் காதலிக்கப்பட்டாரது உருவாகவே தோன்றுதலும், ou மறத்தலும், மனமயக்கம் உறுதலும், உயிர் நீங்கினாத் போன்று உயிர்ப்படங்குதலும் ஆகிய இவை ஒன்பதும் உயிரோரன்ன செயிர்தீர் நட்பாகிய காமவுணர்வின் சிறப்பினைப் புலப்படுத்தும் உணர்வு நிலைகளாதலின் இவற்றைக் களவொழுக்கத்திற்குச் சிறந்தனவாகக்

கூறுவர் ஆசிரியர் எ-று.

வேட்கை முதல் சாக்காடீறாக இங்குச் சொல்லப்பட்ட உணர்வு நிலைகள் காதலர் இருவர்பாலும் தோன்றியபின்னரே மெய்யுறு புணர்ச்சி நிகழும் என்பதாம். காட்சி விகற்பமாகிய ஐயமும் துணிவும் முதலாவது உணர்வுநிலை. வேட்கை இரிண்டாவது உணர்வு நிலை. காட்சி விகற்பமாகிய முதலாவது உணர்வுநிலையுடன் வேட்கை முதலிய இவ்வொன்பது உண்ர்வு நிலைகளையும் சேர்க்க காதலர் இருவரிடையே நிகழும் உணர்வு நிலைகளாகிய அவத்தை கள் பத்தாகும் என்பது இளம்பூரணர் கருத்தாகும்.

N ன்னிலை யாக்கல் !சால் ப் க்கல் முன்னிலை யாக்கல் சொல்வழிப்படுத்தல் கன்னயும் உரைத்தல் நகைகனி உறாஅ அங்கிலை யறிதல் மெலிவுவிளக் குறுத்தல் தன்னிலை யுரைத்தல் தெளிவகப் படுத்தலென்று இன்னவை நிகழும் என்மனார் புலவர்.

இளம்பூரணம்

என்-எனின், இஃது இயற்கைப் புணர்ச்சிக்குரியதொரு திறன் உணர்த்துதல் நுதலிற்று.

தனியினால் தலைமகளை யெதிர்ப்பட்ட தலைமகன் தனது பெருமையும் அறிவும் நீக்கி வேட்கை மீதாரப் புணர்ச்சி வேண்டினா

ரு ; மி அறவு து # 母 னாயினும், தலைமகள் மாட்டு நிற்கும் அச்சமும் நானும் மடனும் நீக்குதலும் வேண்டுமன்றே, அவை நீங்குதற்பொருட்டு இவை

1. தனியினால் . பிறர் யாரும் இல்லாத தனிமைக்கண்.

2. நீங்குதலும் வேண்டுமன்றே என்றிருத்தல் பொருத்தம்.