உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பாகக" . என

களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும்'

(தொல். பொ. கள. 29)

என்பதனால் தலைவியாற் குறிபெற்றுந் தோழியை இரக்கும்.

வகை யென்றதனானே இதனின் வேறுபட வருவனவுங் கொள்க.

அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும் பீடுங் கூறலும் - மதியுடம்பட்ட தோழி நீர் கூறிய குறையை யான் மறந்தேனெனக் கூறுமாயின், அவ்விடத்துத் தன்னொடு கூடாமையால் தலைவிமருங்கிற் பிறந்த கேட்டையும், அவள் அதனை ஆற்றியிருந்த பெருமையையும் கூறுதலும்:

தோழி நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி - தோழி இவ்விடத்துக் காவலர் கடியரெனக் கூறிச் சேட்பட நிறுத்தலிற் றனக்கு உண்டாகிய வருத்தத்தையும் பார்த்து :

உம்மை, சிறப்பு. இதுவே மடன்மா கூறுவதற்கு ஏதுவாயிற்று. மடன்மாகூறும் இடனுமாருண்டே - அச் சேட்படையான் மடலேறுவலெனக் கூறும் இடனும் உண்டு என்றவாறு. .

நோக்கி மடன்மா கூறுமென்க. உம்மையான் வரைபாய்வ. லெனக் கூறும் இடனும் உண்டென்றவாறு. - உ-ம்: "விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடன் மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி வெள்ளென் பணிந்து பிறர் எள்ளத் தோன்றி ஒருநாண் மருங்கிற் பெருநாணிக்கித் தெருவி னியலவுந் தருவது கொல்லோ கலிழ் தவி ரசை நடைப் பேதை . . . மெலிந்தில னாம்விடற் கமைந்த துதே.” (குறுந். 182) இது நெஞ்சொடு கிளத்தல்.

"தானாக தாறு நணைகுழிலாள் நல்கித்தன் பூணாக நேர்வளமும் போகாது-பூனாக மென்றே னிரண்டாவ துண்டோ மடன்மாமேல் நின்றேன் மறுகிடையே நேர்ந்து.” (திணை. நூற். 16)

இது தோழிக்குக் கூறியது.

1. அயர்த்தல் - யநத்தல்,