உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல் தொல்காப்பியம் - பொருளதிகாரம்

இளம்பூரணம்

என்-எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று.

(இ - ள்.) மேல் தலைமகன் மடல்மா கூறும் இடனுமாருண்டே என்றார், இஃது அவன் மடல்மா கூறுதற்கு நிமித்தமாகிய நீக்கத்தினை மாறுபட்டுக் கூறாத் தலைமகள் இயல்பைக் கூறிப் பெயர்ப்பினும், அஃதறிந்து தாம் உடன்படத் தலைமகன் வருத்தத்தினான் மெலிகின்றமை கூறிய இடத்தினும், தலைமகன் குறையை மறுப்புழி அன்பு தோன்றத் தக்க இடத்தும், தோழி உடன்பாடுற்றவழியும், தலைமகனும் மேற்சொல்லப்பட்ட மடல்மா கூறுதல் இடையூறுபடுதலும் தோழியிற் கூட்டத்திற்கு இயல்பு என்றவாறு."

உம்மை இறந்தது தpஇய எச்சவும்மை.

பண்பிற் பெயர்ப்பினும் - தலைமகள் இளமைப்பண்பு கூறிப் பெயர்த்த வழித் தலைமகன் கூறியது. அதற்குச் செய்யுள்:

"குன்றக் குறவன் காதல் மடமகள்

வண்டுபடு கூந்தல் தண்தழைக் கொடிச்சி வளையள் முளைவாள் எயிற்றள் இளைய ளாயினும் ஆரணங் கினளே.” (ஐங்குறு. 256)

பரிவுற்று மெலியினும் - பரிந்த வுள்ளத்துடன் மெலிதலுறுதலும். பரிவுற்றுத் தோழி மெலிதலாவது உடம்படுவளியாள்’ என். றாற்போல வருவது. அவ்வழித் தலைமகன் கூற்று:

'தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழைக்குந் துயர்.” (குறள். 1135)

அன்புற்று நகினும் - அன்பு தோன்றும் உள்ளத்துடன் நக்ககாலும் கூற்று நிகழும். அன்புற்று நக்கவழித் தலைமகன் கூறியதற்குச் செய்யுள்: -

'நயனின் மையிற் பயனிது என்னாது

பூம்பொறிப் பொலிந்த அழலுமிழ் அகன்பைப் பாம்புயிர் அணங்கி யாங்கும் ஈங்கிது

1. "அன்புதோன்ற கக்கவிடத்தும் எனத் திருத்துக,