உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்சு, தொல்காப்பியம - மெய்ப்பாட்டியல்

இச்சூத்திரமென உணர்க. ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட வழிக் கரந்தொழுகும் உள்ள நிகழ்ச்சி பெண்பாலதாகலாற் பெரும்பான்மையும் அவள் கண்ணே ஈண்டுக் கூறுகின்ற மெய்ப் பாடு சிறந்ததென்பது."

(இ- ள். புகுமுகம் புரிதல் என்பது ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழித் தன்னை அவன் நோக்குதற்கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சி. புகுதலென்பது தலைமகன் நோக்கிய நோக் கெதிர் தான் சென்று புகுதல்; முகமென்பது அங்கனந் தான் புகுதற்கிடமாகிய நோக்கு நோக்கெதிர் நோக்குதலை முக நோக்குதல் என்பவாகலின் இந்நோக்கினை முகமென்றானென் பது. புரிதலென்பது, மேவுதல்" என்றவாறு அஃதாவது, தலை மகன் காண்டலைத் தலைமகள் வேட்டல் என்றவாறாம்; மற்றிது தலைமகற்கு உரித்தன்றேனவெனின் அவன் தான் காண்பினல்லது தற்காண்டலை தயவான், அது தலைமையன்றாகலினென்பது:

அது,

"யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற்.

நானோக்கி மெல்ல நகும்" (குறள். 1994) என ஆகும்,

, ஒன்று என்ப்படும் இம்முதற் கூறு க ன் கு பகுதியினையுடையது என்கின்றது இச்சூத்திரம்.

5, அன்பினால் ஒத்த ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட கிலையில் தனது விருப்பத்தினைப்புறத்தாச் க்குப் புலப்படாமல் மறைத்தொழுகுமியல்பு பெண்பாலுக்கே புரியதா கலின் இங்கு ஆது பகுதிகள8 கப் பகுத்துரைக்கப்படும் அகத்தினை மெய்ப். பாடு பெரும்பான்மையும் தலைடிகட்கே சிறப்பா கவுரியது.

.ே மேவுதல் . விரும்புதல்.

1. தலைவன் தலைமகளது எழில்கலத்தைக் காணுதலில் விருப்பமுடைய. ன தலல்லது தன் அழகை அவள் காண்டல் வேண்டுமென விரும்பி அவன் முன் கிற்றல் அவனது தலைமைப் பண்பிற்கு இழுக்காதலின், 'அவன் தான் காண் 3 னல்லது தற்காண் டலை கயவான் என்றார் கயத்தல் . விரும்புதல்.