உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

பாட்டு உரை நூல் முதலிய எழுவகைத் தமிழ்ச் செய்யுளெல்லாம் வடவேங்கடம் தென்குமரியாயிடைத் தமிழகத்து முடிவேந்தர்' வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயரெல்லை அகத்து யாப்பின் வழியதா மெனச் செய்யுளியலிலும், ஆரிய நூல் வழக்குகளைக் கொள்ளாது தமிழ் மரபினையே தாம் கூறுவதாகப் பலவிடத்தும் தொல்காப்பியரே வற்புறுத்துவ தாலும், தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுள்ளிட்ட செய்யுளு றுப்பனைத்தும் இயற்றமிழ் மரபு தழுவியவேயாகும் என்பது ஒருதலை. இவ்வுண்மைக்கு மாறாகப் பிற்கால உரைகாரர் தொல்காப்பியருக்குக் காலத்தாற் பிந்திய வட-ஆரியக் கூத்து நூல்களின் கொள்கைகளே தொல்காப்பியரும் கூறுவதாகக் கொண்டு இவ்வியற்றமிழ் நூற் சூத்திரங்களுள் வடநூல் வழக்குகளைப் புகுத்தி இடர்ப்பட்டுச் சொல்லொடு செல்லா வல்லுரை வகுத்து மயங்க வைத்தார். சொற்றொடர் சுட்டும் செம்பொருளே

1. அகத்தினை மக்களது உள்ளுணர்வுகளால் இயல்பாக விகழும் மெய்ப்பாடுகளையே செய்யுளுக்குரிய உறுப்பாகக்கொண்டு விளக்குவது இயற்றமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் ஆயினும் அதன் கண் இயற்றமிழெ இ தொடர்புடைய இ ைசத்தமிழ் காடகத்தமிழ் இலக்கணங்கள் சிலவும் பிறன் கோட்டிைறல் ன்னும் உத்திவகையாற் கூறப்படுதலுண்டு. இக் துட்பம்,

'அனபிறக் துயிர்த்தலும் ஒற்றிசை டே லும்

உனவென மொழிய இசையொடு சிவணிய

கதம்பின் மதைய வென்மனார் புலவர்' (தொல், எழுத்து, நூன்மரபு-3)

என வும்,

'காடகவழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் ச | ன்ற புலனெறி வழக்கம்’ (தொல். பொருள். அகத்.) எனவும் வரும் சூத்திரங்களால் இனிது புலனாம். இயற்றமிழில் மெய்ப்பாட்டுக்குரிய இலக்கணம் கூறக்கருதிய தொல்காப்பியனார், மெய்ப்பாடு பற்றி கா டகத்தமிழ் தாலார் கூதுவனவற்றைப் பிறன் கோ ட கூறல் என் னும் உத்தியற்றி மெய்ப்பாட்டி. பனின் முதலிரண்டு சூத்திரங்களிற் க. நினார் என்பது இளம் பூரணர், பேராசிரியர் ஆகிய பழைய உரையாசிரியர் கருத்தாகும். இளம்பூரணர் காடகத்தமிழ் நூலாகிய செவித்தியச் சூத்திரங்களை மேற்கோளாகக் காட்டுதலானும், பேராசிரியர் அது முதஐ ைை (ஆகத்தியத்தை) கே க்கிக்கூறியவாறுபோலும்’ என காடகத் தமிழ் நூலையே சுட்டுதலாலும், உரையாசிரியர் இருவரும் பிறன் கோட் கூறல் என்னும் உத்திபற்றிக் குறிப்பீடும் கா ட கது ல் பற்றிய மெய்ப்ப டு நாடகத் தமிழ் நூலிற் குறித்த மெய்ப்பாட்டிணையன்றி வட நூலிற்குறித்த மெய்ப்பாட்டினையன் றென்பது தெளிவு. எனவே “பிற்கால உரை காரர் தொல்காப்பியர்க்குக் காலத் தாற் பிந்திய வட ஆசியக்கூத்து நூல்களின் கொள்கைகளே தொல்காப்பியர் கூறுவதாகக் கொண்டு