பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உல்ச தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

4. உள்ளது.வர்த்தலென்பது, தலைமகனாற் பெற்ற தலை யளி உள்ளதேயாயினும், அதனை உண்மையென்றே தெளியாது அருவருத்துநிற்கும் உள்ள நிகழ்ச்சி, அது 'க-ல்கன் -ன்ன கண்ணகன் பரப்பின்' என்னும் பாட்டினுள்,

வேப்புநனை யன்ன நெடுந்கண் aர்ஞெண்டு

இரைதேர் வெண்குரு கஞ்சி யயலது ஒலித்த பகன்றை யிருஞ்சேற் றள்ளல் திதலையின் வரிப்ப வோடி விரைந்துதன் சர்மலி மண்ணளைச் செறியு மூர' (அகம். 176)

என்புழித், தலைமகன் வாயில்வேண்டச் சென்றானைப் பிறர் கூறும் பழிக்கு வந்தாகயன்றமையின் இஃது உள்ள துவர்த்த லாயிற்று.

'பட்டுழி யறியாது பாகனைத் தேரோடும்

விட்டவள் வரனோக்கி விருந்தேற்றுக் கொளநின்றாய்” (கலி. 69) என்பதும் அது.

5 புணர்ந்துழியுண்மையென்பது, முன்கூறிய இல்லது காய் தலும் உள்ளது.வர்த்தலுமாகிய விகாரமின்றிப் புணர்ச்சிக் காலத் துச் செய்வன சென்ற உள்ள நிகழ்ச்சி; அது,

'குளிரும் பருவத்தே யாயினுந்' (ஐந்திணை ஐம், 30)

என்பது என்னை? புணர்ந்துழியுண்மை கூறினாள் விகாரமின்றி யாதலின்.

6. பொழுதுமறுப்பாக்கமென்பது, களவின்கட் பகற்குறியும் இரவுக்குறியுமென வரையறுத்தாற்போல்வதோர் வரையறையின் மையின் அப்பொழுதினை மறுத்தலாகிய ஆக்கமென்றவாறு; எனவே, களவுக்காலத்துப் பொழுது வரைந்து பட்ட இடர்ப் பாட்டினிங்கிய மனமகிழ்ச்சி ஆக்கமெனப்படும்; அது,

'அயிரை பரந்த வந்தண் பழனத்

தேத்தெழின் மலந்த துாம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள் இடைமுலைக் கிடந்து நடுங்க லானிர்