பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懸.象一妒 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

பேராசிரியம்

இது, காமக்குறிப்பாகாதன கூறுகின்றது.

(இ- ள்) நிம்பிரி-பொறாமை தோன்றுங் குறிப்பும்; அவை இந்நாட் சிறிதுபொறுத்தாயென்றாற் போல்வன: கொடுமை கேடுகுழ நினையுந் தீவினையுள்ளமும்; வியப்பு-தலைமகள் பால் தெய்வத்தன்மை கண்டான்போல் வியந்தொழுகுதலும்; இனிக் குணத்தின்மேற்கொண்டு தன்னை வியத்தலெனினும் அமையும் புறமொழி புறங்கூற்றும்; வன்சொல்-கண்ணோட் டமின்றிச் சொல்லுஞ் சொற்களும்; பொச்சாப்பு-கடைப்பிடி யின்றி ஞெகிழ்ந்திருத்தலும்; மடிமை - சோம்புள்ளமும்; குடிமை -இவள் இழிந்தபிறப்பினளெனத் தன்னை நன்கு மதித்தொழு குதலும் இன்புறல் - ஒருவரொருவரிற்றாமே இன்புறுகின்றா ராக நினைத்தலும்; ஏழைமை நுழைந்தவுணர்வினரன்றி வரும் வெண்மையும்; மறப்பு-மறவியும்; ஒப்புமை - இன்னாளையொக்கும் இல்ளென்று அன்புசெய்தலும்; என்று இவை இன்மை என்மனார் புலவர்- இவையெல்லாம் இன்றிவருந் தலைமகன்கண் நிகழும் மெய்ப்பாடென்று சொல்லுவர் புலவர் (எ-று)

எனவே, அவைதம்மை வரையறுத்துக் கூறாது அவற்றுக் காகாதன வரையறுத்துக் கூறினானென்பது. தலைமகட்குரிய மெய்ப்பாடாயின வரையறுத்துக் கூறினமையின் அவற்றுக்காகா தன கூறல்வேண்டுவதன்றென்பது. ஆகாதவற்றுக்கு உதாரணங் காட்டலாவதில்லை. ) ټو-ع(

பாரதியார்

கருத்து. இஃது இவ்வியலிற் கூறிய மெய்ப்பாடுகள் தோன் றுதற்குரிய காதலுக்காகாத குற்றங்களைக் கூறுகின்றது.

பொருள்: திம்பிரி=பிழைபொறாப் பெற்றி; அதாவது சகிப் பின்மை இல் தழுக்காறன்று 'அழுக்காறு தனித்தார் மாட்டும் தவறாமாதலானும், இங்குக்காதலர் வாழ்வுக்காகாதன கூறுவதிே கருத்தாதலானும், குற்றம் பார்க்கிற் சுற்றமில்லை. யாமாதலா னும், இற்கிழத்திக்கு இன்றியமையா மடன் என்பது தலைவன் குற்றம் தானறியாமை யாதலானும், தலைவனைக்காணாக்கால் அவன் தவறல்லன காணாத் தன்ல்வி, அவனைக்காணுங்கால் தவறாய கானாள் என இல்லாளியல் சொல்லப்பெறுதலானும்