உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - பதிப்புரை

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஆறாவது இயலாக அமைந்தது மெய்ப்பாட்டியலாகும். இய்வியலுக்கு இனம்: ' கும் பேராசிரியரும் எழுதிய உரைகள் இரண்டுமே கிடைத் துள்ளன. தொல்காப்பியத்திற்கு நெடுங்காலம் பி. ற் ப ட் டு த் தோன்றிய இவ்வுரைகளில் உரையாசிரியர்கள் வாழ்ந்த காலச் சூழ்நில்ைவினையொட்டி நூலாசிரியர் கருதாத பி. ற் க | ல க் கொள்கைகளும் இடம்பெற்றிருத்தற் கூடுமாதலின் தமிழ்மக்களது தொன்மை நாகரிகத்தினையும் பண்பாட்டினையும் உள்ள வா றுணர வேண்டுவோர் இடைக்காலத்தில் தோன்றிய உரைகளின் வழிச் செல்லாது தொல்காப்பிய மூலத்தை அடியொற்றி அந் நூலின் பொருளை யறிந்து கொள்ளுதல்வேண்டும் என்ற தெளிந்த நோக்குடன் தொல்காப்பியம் பொருட்படலத்திற்குப் புத்துரை யெழுதும் பணியில் ஈடுபட்ட கணக்காயர் நாவலர் டாக்டர் ச. சோமசுந்தரப் பாரதியாரவர்கள் தொல்காப்பிய மெய்ப்பாட் டியலுக்குத் தமது ஆராய்ச்சித்திறம் விளங்கப் புதியவுரை வரைந்துள்ளார்கள். மெய்ப்பாட்டியலுக்கமைந்த இவ்வுரைகள் மூன்றும் சூத்திரந்தோறும் கால அடை வில் தரப்பெற்றன. இவ்வுரைகளின் பின்னே தொல்காப்பிய மூலத்தை அடியொற்றிச் சூத்திரத்தின் கருத்தும் பொருளும் விளங்க எளிய தமிழ்நடையில் ஆய்வுரைப் பகுதி எழுதிச் சேர்க்கப் பெற்றுள்ளது. உரைகளிற் கண்ட உதாரணப் பாடல்களில் மூலத்தோடும் உரைப் பகுதி யோடும் நெருங்கிய தொடர்புடையன உரையிலுள்ள படி முழுமையாகவும் ஏனையவை முதற் குறிப்பு நாற்பெயர் பாடல் எண் என்ற அளவில் சுருக்கமாகவும் காட்டப்பெற்றன.