உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

டோன்றிய அச்சம் முற்கூறி இதனை ஈற்றுக்கண் வைத்தமை யான் எடுத்தோதிய நான்கும் போலாது, இது பிறன்கட் டோன்றிய இன்பம் பொருளாக வருமென்பது கொள்க.“ (க.க)

பாரதியார்

கருத்து:-இஃது, உவகை வசையும் இயல்பும் உணர்த்து கிறது.

பொருள்:-செல்வம்- திரு அல்லது ஆக்கப் பெருக்கம்: புலன் - அறிவிலுாறும் அகமலர்ச்சி ; புணர்வு-கற்புறு காதற் கூட்டம்; விளையாட்டு-தீதில் பொய்தல்; என்று அல்லல் நீத்த உவகை நான்கே-இந்நான்கும் அலக்கண் விலக்கிய மகிழ்ச்சி வகையாகும்.

குறிப்பு: செல்வம், அகமகிழ்விக்கும் ஆக்கப் பொதுப்பெயர். யாண்டும் எனைத்தளவும் உளமுளைய வருவதெதுவும் உவகைப் பொருளாகாது. புலன் ஈண்டுக் கல்விப் பயனா மறிவைக் குறிக்கும். அரிய புதிய ஆய்ந்து நுட்பமுண்ர்ந் துண் மகிழ்தற் கேது வாமறிவு ஈண்டுக் குறிக்கப்பட்டது. நிறைந்த கல்வி உதவும் புகழ்க்குரிய மு ன் கு றி த் த பெ ரு மி த உ ண ர் வி ன் உள்ளுறு மறிவின்பம் வேறாதலின், அவ்வறிவின்பம் இங்குப 'புலனுவகை' எனக் கூறப்பட்டது. இதனை உரனொடு முரனும் உணர்வு வகையாம் ஐம்பொறி நுகர்வென இளம்பூர் னர் கூறுவராலெனின், பொறிவாயிலைந்தும் அவித் தடக்கம் பாலவென வெறுக்கப் பெறுதலானும், அவற்றில் அல்லல் நீத்தல் கூடாமையானும், அது பொருளன்மையறிக."

8. உ. வகை என்னும் இது, தன் கண் தோன்றிய பொருள் பற்றிவரும். பிறர் கண் தோன்றிய இன்பம் பற்றியும் உவகை தோன்றும் என்பது 'அல்லல் சித்த 2. வகை என்னும் சொற்குறிப்பினாலும் தன் கண் தோன்றிய பெருமிதமும் டவ" கையும் முற் கூறாது பிறர் கண்தோன்றிய அச்சத்தை முற் கூறி உவகையினை இறுதிக்கண் வைத்தமையாலும் கொள்ளப்படும்.

1. பொதல்-விளையாட்டு.

2 உ அம் உளைய-பிறர் மனம் புண்பட.

8. சண்டுப் புலன் என்றது, கல்வியறிவினைக்குறிக்காமல் கல்வியின் பயன க உள் ளு றும் தெள்ளிய அறிவினைக் குறிப்பதாகும் என்பதும், புலன் என்பதற்கு ஐம்பொறி நுகர்வு என இளம்பூரண் கூறும் பொருள் அல்லல் கீத்த உவகைக்கேதுவாகிய பொருளாகாதெனபதும் காவலர் பாரதியார் கருத்தாகும்.