உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

கையாறு என்பது இ ன் படம் பெறாமையான் வருந்துன்பம்; இடுக்கணாவது துன்பமாயின வந்துறுதல்.’

'அடுக்கி வரினு மழிவிலா னுற்ற இடுக்கண் இடுக்கட் படும்' (குறள். சுஉடு)

என்றவழி இடுக்கணென்பது வருவதொன்றாகக் கூறியவாறு காண்க.

கையாறென்பது-மனத்தின்கண் நிகழ்வதோர் மெய்ப்பாடு, இடுக்கணென்பது - மெய்யானுந் தோற்றுவதோர் மெய்ப்பாடு.

பொச்சாப்பு என்பது -மறத்தல்.

'பொருள் தீர்ந்த பொச்சாந்துஞ் செயல்லார் மருள் தீர்ந்த மாசறு காட்சி பவர்' (குறள். ககக) என்பதனாற் பொச்சாப்பு மறத்தலாயிற்று.

பொறாமை என்பது-பிறர்க்கு ஆக்க முதலாயின. கண்ட வழியதனைப்பொறாது நடக்கும் மன நிகழ்ச்சி, அதனை அழுக் காது என்ப.

'அழுக்கா றெண்வொரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும.” (குறள் . சகஅ) என்றவழி அழுக்காறு என ஒரு மெய்ப்பாடு உளதாகியவாறு கண்டு கொள்க.

வியர்த்தல் என்பது -தன் மனத்தின் வெகுட்சி தோன்றிய வழிப்பிறப்பதோர் புழுக்கம்.

'பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.' (குறள். ச.டி.எ)

8. கையாறு என்பது இன்பமின்மையால் வருக்துன்பம் எனவும் இடுக்கண் - ன்பது துன்பமுதுதலான் வருந்துன்பம் எனவும் இயம்பூரணர் தரும் விளக்கம் கிையுணரத்தகுவதாகும்.