பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25? தொல்காப்பியம் நுதலியபொருள் யாசிரியர்கள் பாத்தோறும் தாழிசை துறை விருத்தம் எனப் பிற் காலத்தார் பகுத்துரைத்த இப்பகுப்பு முறை பொருந்தாதெனக் காரணங்காட்டி மறுத்துள்ளார்கள். ஒழுகிய ஓசையுடன் ஒத்த அடி இரண்டாய் விழுமிய பொரு ளினதாய் வரும் செய்யுளை வெண்பாவிற்கு இனமாக்கி வெண் செந்துறையென வழங்குதல் பிற்கால யாப்பியல் மரபாகும். ' கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை என்று மேத்தித் தொழுவோம் யாமே ' என்பது வெண் செந்துறைக்கு உதாரணமாகக் காட்டப்பட்ட செய்யுளாகும். இஃது இரண்டடியாய் வருதலின் அடியளவு நோக்கி வெண்பாவினுள் ஒரு சாரனவற்றிற்கும் கலிப்பாவினுள் ஒரு சாரனவற்றிற்கும் இனமெனப்படும். இனி, சீருந்தளையும் நோச்க ஆசிரியப்பாவிற்கு இனமெனவும் கூறுதல் பொருந்தும். எனவே இதனை மேற்காட்டிய பாக்களுள் ஒன்றற்கு மட்டும் இன மாக்கி யுரைத்தல் பொருந்தாது. அன்றியும் இவ்வாறு இரண் டடியால் வருவனவற்றுள் ஒழுகிய வோசையின்றிச் சந்தம் சிதைந் தனவும் விழுமிய பொருளின்றி வருவனவும் ஆகியவற்றைத் தாழிசையென வேருேர் இனமாக்கி யுரைப்பர். தாழம்பட்ட ஓசையும் விழுமிய பொருளும் இல்லாதனவாகிய அவற்றுக்குத் தாழிசையெனும் பெயர் கூறின் முற்கூறிய தாழிசைகளும் சந்தஞ் சிதைந்து புன் பொருளவாய் வருவதற்குரியன எனத் தவருகக் கருத வேண்டிய நிலையேற்படும். ஆகவே அவற்றுக்குத் தாழிசை யென்னும் பெயர் பொருந்தாது. ' கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி ’ (சிலப்-ஆய்ச்சியர் குரவை)