பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 தொல்காப்பிய ஆராய்ச்சி படைத்துக் கொண்டிருப்பர். பின்னர் ஒன்று கூடிப் பழகுங்கால் ஒரு பகுதியினர் சொல்லை இன்னொரு பகுதியினரும் ஏற்றுத் தாம் படைத்த சொல்லையும் விட்டுவிடாது வழங்கியிருப்பர். அதனால் ஒரு பொருளை யறிவிக்கப் பல சொற்கள் தோன்றியிருக்கக் கூடும். மிகுதிப் பொருளை உணர்த்த உறு, தவ, நனி என்ற மூன்று சொற்கள் உண்டு என்கின்றனர். 'உறு, தவ, நனி யென வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள வென்ப." மூன்று சொற்களும் மூன்று வேறுபட்ட சூழ்நிலையில் தோன்றியிருத்தல் கூடுமன்றோ? ஆதலின் சொல் தோற்றத்திற்குரிய சொல்லையே (வேர்ச் சொல்லையே) உரிச் சொல் என்றார் ஆசிரியர் என்பது பொருந்தும் கூற்றேயாகும். அவ்வாறு தோன்றி வளர்ந்துள்ள சொற்கள் எல்லாவற்றையும் கூறுவது என்றால் இய லக்கூடிய செயலன்று ஆதலின் யாவராலும் எளி தில் அறியக்கூடிய உரிச் சொற்களை விட்டுவிட்டு எளிதில் அறிந்துகொள்ள முடியாத சொற்களை மட்டும் எடுத்து விளக்குகின்றார். அவரே கூறுகின்றார். வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா உரிச்சொல் மேன. எனவே உரியியலில் சொற்பிறப்புக்கு அடிப்படை யாகிய சொற்பகுதிகளை விளக்கும் பணியை மேற் கொண்டுள்ளார் எனத் தெளியலாம். சொற்களுக்குப் பொருள் கொள்ள வேண்டிய முறைமையினையும் குறிப்பிடுகின்றார். ஒரு சொல்லின் பொருளை அதனை யடுத்து முன்னும் பின்னும் வரும் சொற்களைக் கொண்டுதான் அறிய முடியும். 'செல்லல்' என்னும்