பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தொல்காப்பிய ஆராய்ச்சி அன்றியும் மக்களின் வாழ்வைச் செம்மைப் படுத்துவதும் இலக்கியமேயாகும். இலக்கிய மணமற்ற வாழ்வு இன்பமற்ற வாழ்வாகும். இலக் கியப் படைப்பும் இலக்கியப் பயிற்சியும் மக்கள் வாழ்வுக்கு இன்றியமையாதன என்பதனை நன்கு தெளிந்த தமிழ்ச் சான்றோர் மொழிநூற் புலமை யோடு இலக்கியப் புலமையும் யாவர்க்கும் வேண்டும் என்று கருதி மொழி நூலையும் (Science of Language), இலக்கிய விளக்க நூலையும் (Science of Literature) ஒன்றாக இணைத்து நன்றாகப் பயிலும் முறையை நானிலத்திற்குக் காட்டினர். ஆசிரியர் தொல்காப்பிய ரும் அவ்வழியைத் தொடர்ந்து எழுத்தும் சொல்லும் அறிந்தார் இலக்கியமும் தெளிதல் வேண்டுமெனப் பொருள் என்ற பெயரால் இலக்கிய இலக்கணம் கூறினார். பொருள் என்ற பெயர் மிகவும் பொருட் செறிவுடையது. இலக்கியத்தின் பொருள் வாழ்வு ; வாழ்வின் பொருள் இலக்கியம். இவ்விரண்டு பற்றியும் கூறுவதே பொருட் படலம் (பொரு ளதிகாரம்). மேலை நாட்டு மொழிகளில் எல்லாம் இலக்கிய ஆராய்ச்சி (Criticism of Literature) நன்கு வளர்ந் துள்ளது. ஆனால் இலக்கிய இலக்கணம் உருவாக வில்லை. தோன்றிய இலக்கியத்தை ஆராய்ந்தார்கள்: அவ்வாராய்ச்சிக் கலையை நன்கு போற்றினர். ஆனால் இவ்வாறுதான் இலக்கியம் இயற்றப்படல் வேண்டு மென்று வரையறுத்துக் கூறினார் இலர். புலவர் தாம் விரும்பியவாறு புதியன படைத்தலை மேற்கொள்ள உரிமையளித்தனர். ஆனால் தமிழ் முன்னோர்கள் பன்னெடுங்காலப் பயிற்சியின் பயனாக இலக்கியப் படைப்புக்குரிய விதிமுறைகளை அறிந்து இவ்வாறுதான் இலக்கியம் இயற்றப்படல் வேண்டு