பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தொல்காப்பிய ஆராய்ச்சி தொல்காப்பியர் காலத்தில் தமிழர்க்கும் வட மொழியாளர்க்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. வட மொழியாளரை 'மறையோர்' என்று குறிப்பிட் டுள்ளார். வடமொழியாளர் தம் நூல்களுள் சில வற்றைத் தமிழர்க்குப் புறம்பாக மறைத்து வைத்துக் கொண்டமையின் மறையோர் என அழைக்கப் பட்டனர் போலும். மறையோர் நாட்டில் எட்டு வகை மணமுறை இருந்ததைத் தொல்காப்பியர் சுட்டிக் காட்டுகின்றார். பிரமம், பிராசா எட்டுவகை மணங்களாவன: பத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம். இராக்கதம், பைசாசம் என்பன. பிரமம்: நாற்பத்தெட்டு ஆண்டுகள் மணமாகா திருந்து, பன்னிரண்டு வயதுள்ள பெண்ணைப் பூப்பு அடைந்தவுடன் இரண்டாம் பூப்பு வருவதற்கு முன்னர் அணிகலன்களுடன் தானமாகப் பெறுவது. இருவரும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டுமாம். பிராசாபத்தியம்: மகளைக் கொள்ளுவதற்குரிய கோத்திரத்தார் கொடுக்கின்ற பரிசத்தைப்போல் இரண்டு மடங்கு கொடுத்துத் தம்மகளை மணம் செய்விப்பது. ஆரிடம்: தக்கான் ஒருவனுக்கு ஆவும் ஆனேறும் பொற்கொம்பு, பொற்குளம்பு உடையனவாகச் செய்து அவற்றிடை நிறுத்தி பொன் அணிகலன்களைப் பூட்டி நீவிரும் இவைபோல் பொலிந்து வாழ்வீர் என நீர் பெய்து கொடுப்பது. தெய்வம்: பெருவேள்வி செய்கின்றார் பலருள்ளும் ஒத்த ஒருவனுக்கு அவ்வேள்வித்தீ முன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது.