பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 157 வரின் இயல்பாகும்" என்பதே பொருள். "மக்களிலும் உயர்ந்தோராகக் கருதப்படும் தேவருலகக் கந்தருவ மணமுறையே எம் தமிழ் மண முறை' என்று இடித்துக் கூறி அதன் பெருமையை நிலை நாட்டியுள்ளார். வடவர்க்குத் திருமணம் என்பது புதல்வரைப் பெறுவதற்காகவே. ஆண் பெண் சேர்க்கையால் புதல்வன் பிறத்தல் வேண்டும். ஆதலின் காதலை அடிப்படையாகக் கொள்ளவில்லை. தமிழர்க்கு மணம் என்பது ஆணுக்கும் பெண் ணுக்கும் இயல்பாக நிகழ வேண்டிய வாழ்வின் இன்பக்கூறுகளுள் ஒன்று. வாழ்வின் தலையாய இன்பம் அதுவே என்று கருதினர். ஆதலின் அதனை ' இன்பம் ' என்றே அழைத்தனர். தொல்காப்பியரும் இவ்வின்பத்துக்கு முதன்மை கொடுத்து, 'இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு" என்று கூறினார். திருமண இன்பம் தலையாய இன்பம்; அது காதல் நெறியில் தான் அடையப்பெறல் வேண்டும் என்பதே தொல் காப்பியர் துணிபு. காதல் எவ்வாறு உண்டாகும் என்பதை பின்வரும் நூற்பாவால் கூறுகின்றார். ஒன்றே வேறே என்று இருபால் வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே.' நச்சினார்க்கினியர் கூறும் பொருளாவது:- இரு வர்க்கும் ஓரிடமும் வேற்றிடமும் என்று கூறப்பட்ட இருவகை நிலத்தின் கண்ணும் உம்மைக்காலத்து எல்லாப் பிறப்பினும் இன்றியமையாது உயிர் ஒன்றி ஒருகாலைக்கு ஒருகால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏதுவாகிய பால்வரை தெய்வத்தின் ஆணையாலே பிறப்பு முதலிய பத்தும் ஒத்த தலைவனும் தலைவியும்