பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தொல்காப்பிய ஆராய்ச்சி என்று கூறி அவள் அவரைக் கண்டு ஐயப்பட்டதாக வரைந்துள்ளமை நச்சினார்க்கினியர் கொள்கைக்கு முரண்பட்டதாகும். நச்சினார்க்கினியர் சேக்கிழார்க் குக் காலத்தால் பிற்பட்டவரே. அங்ஙனம் இருந்தும் பெரிய புராணத்தை அறியாதார்போன்று தலைவிக்கு ஐயம் நிகழக்கூடாது என்று கூறியுள்ளமை வியக்கத் தக்கது. இருபாலார்க்கும் காப்பிய உலகிலும் ஐயம் நிகழலாம் என்பதே சேக்கிழார்க்கும் உடன் பாடாகும். ஐயத்தைப் போக்கிக் கொள்வதற்குத் துணையாய் உள்ளனவற்றைக் கூறும் நூற்பா இருபாலார்க்கும் பொருந்த உரைத்துக் கொள்ளலாம். காதலர் சந்திப்பில் கண்களுக்குத்தான் முதன்மை இடம். காணும் கருவிகளாக மட்டுமன்றி ஒருவரை ஒருவர்க்கு ஆட்படுத்தும் கருவிகளாகவும் துணைபுரியக் கூடியன. ஆகவே இருவர் அறிவும் ஒன்றுபட்டு ஒன்று கூடி இன்புறுதற்குக் குறிப்பால் உணர்த்துவன கண்களே. கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள் பயனற்று விடுகின் றன. ஆதலின் ஆசிரியர் தொல்காப்பியர், “நாட்டம் இரண்டும் அறிவு உடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்" என மொழிந்தார். இருவரும் தத்தம் கண்களால் தத்தம் விருப்பத்தை அறிவித்துக்கொள்வது ஏன்? காதல் விருப்பத்தை உரைகளால் வெளிப்படுத்தல் நாகரிகம் அன்று. யாங்கணும் உள்ள உலக மக்களிடையே காணப்படும் பொது இயல்பாகும். குறிப்பாலுணர்ந்து விருப்பம் அறிவிக்கும் நாகரிக மற்று வெளிப்படையாகச் சொல்லின் உண்டாகும் ஏதம் பலவாம். மலரினும் மெல்லிதாகிய