பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 205 ஆதலின் அதனை அறத்தொடு நிற்றல் என அழைத் தனர். இவ்வறத்தொடு நிற்றல் எழு வகைப்படும். அவையாவன:- எளித்தல், ஏத்தல், வேட்கையுரைத் தல், கூறுதல், உசாதல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்பல். இவ்வெழுவகைக் கூற்றால் அறத்தொடு நிற்கும் பொழுது தலைவியின் விருப்பத்தைக் குறிப்பாலறிந்து தோழி சொல்லற்பாலள், தலைவி எளிதில் மறையை வெளிப்படுத்த மாட்டாள். பெண்களுக்குரிய சிறப் புக் குணங்கள் அடக்கமும் மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளமும், நடுநிலைமையும், உரியகாலத் தில் உரியன கூறலும், அறிவுடைமையும், உள்ளக் கருத்தை எளிதில் அறிவியாமையும் ஆம். பெண் களைப் பற்றி ஆசிரியர் தொல்காப்பியர் இவ்வளவு உயர்வாக கூறியிருத்தலை பெண்களே அறியார். நமது நாட்டில் பெண்களை இழிவு படுத்தும் உளப் பாங்கு இடைக் காலத்தில் தோன்றியது 'எண்ணறக் கற்று எழுத்தற ஓதினும் பெண் புத்தி என்பது பெரும் பேதைமைத்தே" என்றனர் பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்' என்றனர். ஆழாழி யன்ன அளவுபடா வஞ்ச நெஞ்சப் பாழான மாதர் என்றனர். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு' என்பனவே அவர்க்கியல்பாக உள்ளன என்றனர். ஆனால் ஆசிரியர் தொல்காப்பியர் கூறுவதென்ன? செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான ” " இவ்வளவு உயர்த்திக் கூறும் ஆசிரியரைப் பெண் ணுலகம் நாளும் போற்றுதல் வேண்டுமன்றோ? தம் குழந்தைகளுள் ஒன்றினுக்கு அவர் பெயரை இட்டு வழங்கித் தம் நன்றியறிதலை வெளிக்காட்டல் வேண்டாமா?