பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தொல்காப்பிய ஆராய்ச்சி தலைவன் தலைவியிடம் அவள் வாயில் ஊறும் நீரை (எச்சிலை)கள்ளை விட மகிழ்ச்சியளிக்கும் என்று கூறி அவள் நகைகளையும் சீர்படுத்தினான். அதனால் தலைவி ஐயங் கொண்டுவிட்டாள். தலைவன் நினைப்பது என்ன என்று கேட்கிறாள். ஆதலின் தலைவன் தலைவி யைப் புகழத் தொடங்கின் தலைவன் தலைவியை விட்டுப் பிரியத் திட்டமிட்டுள்ளான் என்று தோழியும் தலைவியுமறிந்து தலைவனிடம் நெருங்கி அவன் பிரிந்து செல்லாவகையில் வேண்டுவன கூறுவர். இவ்வாறு எல்லாம் இயற்றப்பட்டுள்ள இலக்கியங்களாகக் கிடைத்துள்ள பாட்டிலும் ெ தாகையிலும் காணலாம். 1 தலைவன் பரத்தைமை ஒழுக்கத்தை அறிந்து தலைவி அவனைப் பழியாது புகழ்வாள். கற்பு வழிப் பட்ட அவள் புகழ்ந்தாலும் அவள் உள்ளத்தில் ஊடல் உண்டு என்று அறிதல் வேண்டும். பரத்தையைப் பாராட்டித் தலைவன் உள்ளக் குறிப்பினை அறியவும் முயலுவாள். தோழிக்கும் தலைவிக்கும் தலைவனை வாழ்த்தவும் வையவும் பழிக்கவும் உரிமையுண்டு. இவைகளை எல்லாம் வெளிப்படையாகக் கூறாது, குறிப்பாகவே கூறுவர். காதலைச் சிறப்பித்துக் கூறுவதற்குச் சினன், பேதைமை, பொறாமை, நல்குரவு முதலியன பயன் படும். இவை வெறுக்கத் தக்கன என்றாலும் இவைகளால் காதல் சிறப்புறும் வகையில் பாடல் இயற்றுதல் உண்டு. கண்ணால் கண்டு அறிய முடியாத பண்பு நலன் களைச் சொல்லால்தான் அறிய முடியும். அவை 1. பாட்டு பத்துப்பாட்டு. தொகை = எட்டுத்தொகை.