பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 தொல்காப்பிய ஆராய்ச்சி 5. புறத்திணை இயல் அகப் பொருள் பற்றி இலக்கியம் படைத்தற் சூரிய மரபுகளை அறிந்தோம். இனிப் புறப் பொருள் பற்றி இலக்கியம் படைத்தற்குரிய மரபுகளை அறிவோம். " " புறம்" என்பது, அகத்திற்கு மறுதலையானது. ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லார்க்கும் துய்த்து உணரப்படுதலானும், அவை இவ்வாறு இருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும், அவை புறமெனவே படும்" என்.று நச்சினார்க்கினியர் கூறி யுள்ளார். அகம் என்பது காதல் பற்றி எழும் இலக்கியம் என்றால் "புறம்" என்பது காதலுக்குத் துணையாக வீட்டிற்கு வெளியே நிகழக் கூடிய போரும், பொருளீட்டலும், அரசியலும், அறப்பணி களும் என்று கூறலாம். அகத்திணை ஏழு என்றாற் போல புறத்திணையும் ஏழு என்றார். ஒவ்வொரு. அகத்திணைக்கும் ஒவ்வொரு புறத்திணை உண்டு. அகத்திணையும் புறத்திணையும் வருமாறு:- 1. குறிஞ்சி - வெட்சி, 2. முல்லை-வஞ்சி, 3. மருதம்- உழிஞை, 4. நெய்தல்- தும்பை, 5. பாலை - வாகை, 6.பெருந்திணை -காஞ்சி. 7. கைக்கிளை - பாடாண். இன்ன அகத்திற்கு இன்ன புறம் என்று ஆசிரியரே குறிப்பிட்டுச் செல்கின்றார்.