பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தொல்காப்பிய ஆராய்ச்சி நட்டனர். பின்னர் புகழெய் தி மாண்டோர்க் கெல்லாம் அவர் பீடும் பெருமையும் எழுதிக் கல் நட்டனர். அக்கல் நடு விழாவே இன்று இறந்துபோன வர்க்குப் பத்தாம் அல்லது பதினாறாம் நாளில் கல்லிடும் சடங்காக மாறுதல் பெற்றுள்ளது. பொருளறியாது செய்யப்பட்டு வருகிறது. அக்காலத்தில் கல் நடும் விழா அறுவகைப் பிரிவினையுடையதாக இருந்துள்ளது. " காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல் சீர்த்தகு மரபின் பெரும்படை. வாழ்த்தல் என்று இருமூன்று மரபின் கல்லொடு புணர. " "காட்சி” என்பது உருவம் சமைப்பதற்குத் தக்க கல்லைக் காண்டலும், சமைத்த பின்னர் அதனை நாட்டிக் காண்டலும் ஆம். "கால் கோள்" என்பது கல்லறுத்து இயற்றுதற்குக் கால் கோடலும் நாட்டிய பின்னர் அவன் ஆண்டு வருதற்குக் கால் கோடலும் ஆம். நீர்ப்படை" என்பது கண்டு கொண்ட கல்லினை நீர்ப்படுத்தித் தூய்மை செய்தலும், பின்னர்ப் பெய ரும் பீடும் எழுதி நாட்டியவழி நீராட்டுதலும் ஆம். "பெரும்படை" என்பது அவன் செய்த புகழ்ச் செயல்களைத் தகும்படிப் பொறித்தலும், அக்கல்லைத் தெய்வமாக்கி அதற்குப் பெரும் சிறப்புக்களைப் படைத்தலும் ஆம். .. வாழ்த்தல் என்பது கால்கொள்ளுங்கால் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்து வாழ்த்தலும், பின் னர் நட்டப்பட்ட கல்லினைத் தெய்வமாக்கி வாழ்த்த லும் ஆம். இங்குக் கூறப்பட்டவை எல்லாம், கோயில் எடுக்குங்கால் கொள்ளப்பட்டு வருகின்றன. வீரர்