பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 தொல்காப்பிய ஆராய்ச்சி தும் முன்னின்று நடாத்தும் வேந்தரையோ படைத் தலைவரையோ சார்ந்திருந்தது. படைகளுள் தார்ப் படை, தூசிப் படை, கூழைப் படை என்பனபோன்ற பலவகைப் பிரிவுகள் ஒழுங்குறப் பொருந்தியிருந்தன. போர்ச் செயலுள் தனியாண்மை காட்டிய வீர மறவர் வழியில் வந்த தமிழ்ப் பெருமக்களைப் படைக்குரிய ராக ஆங்கிலேயர் மதியாது இருந்தமை வருந்தத் தக்கது. போரின் இறுதி வெற்றி, பொருகின்ற இரு பகுதி யினருள் ஒருவர் வெற்றிபெற்றுத்தானே ஆதல் வேண் டும். வெற்றியின் அடையாளம் வாகைசூடுதல். ஆனால் ஆசிரியர் தொல்காப்பியர் போர் வெற்றியை மட்டும் வாகை யென்று சுட்டவில்லை. போர் ஒழிய வேண்டும் என்ற கொள்கையையுடைய அவர் வெற்றியைப் பாட மட்டும், இலக்கணம் வகுக்க மாட்டார் அன்றே. ஆயினும் அவர் காலத்தில் போர் முற்றிலும் ஒழிந்துவிடவில்லை. ஒழியவேண்டு மென்ற கொள்கை வெற்றி பெற்று விடவும் இல்லை. ஆதலின், ஆசிரியரும் போர் வெற்றி பற்றிப்பாடும் சில துறைகளைக் குறிப்பிடவேண்டிய நிலையில் உள்ளார். வாகை தானே பாலையது புறனே தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப. ” வாகையைப் பாலைக்குப் புறமாகக் கூறியது ஏன்? பாலை என்பது பிரிவு. பிரிவு முதலில் துன்பமாயினும் பின்பு இன்பம் பயக்கும். பிரிந்து சென்ற தலைவன் போர் வெற்றி பெற்றோ, பொருளீட்டிக் கொண்டோ. புதுக் கல்விச் சிறப்பு எய்தியோ வீட்டுக்குத் திரும்பி வருங்கால் தலைவியின் இன்பம் முன்னிலும் பன்மடங்காகும். வாகையிலும் தலைவன் தலைவியை