பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 தொல்காப்பிய ஆராய்ச்சி வ்வுண்மையை உணர்ந்துவிட்டது. இவ்வுண் மையை அறிந்ததன் பயனாய் ஆன்று அவிந்து அடங்கி வாழத் தலைப்பட்டுவிட்டது. நிலையாமை உணர்ச்சி நாளும் ஆற்றும் முயற்சிக் குத் தடையாக இராதோ எனின்; இராதவாறு அறிவு நலம் பெறுதல் வேண்டும். என்றும் நிலைத் திருப்போம் என்று எண்ணி ஏமாற்றமுறுவதைவிட நாம் என்றாவது இறப்போம் என்று அறிந்திருப்பது நன்மையை விளைக்கக் கூடியதே. பொருள் மிகுதியாலும், படைப் பெருக்காலும், உடல் வலிமையாலும், சிறந்திருப்போர் நிலையாமை அறிவைப் பெற்றால் அன்றி அறநெறியில் செல்லார். மக்களை அறநெறிப்படுத்தி நல்வாழ்வு வாழச் செய்ய இந்நிலையாமை உணர்வு இன்றியமையாததே. நிலையாமை உணர்வுபற்றிப் பாடும் முறைமை யைக் 'காஞ்சி' யென்று அழைத்தனர் ஆசிரியர். புறத்திணையில் காஞ்சி என்பது அகத்திணையின் பெருந்திணைக்குப் புறனாகும் என்றனர். பெருந் திணைக்கு நிலவரையறை யில்லை; பொழுது வரை யறை யில்லை. காஞ்சிக்கும் இவ்விரண்டு வரையறை யுமில்லை. பெருந்திணையில் காதல் வரையறை கடந்து மிஞ்சிச் செல்லும். காஞ்சியில் மறம் வரையறை கடந்து வீறுபெறும். இக்காஞ்சித் திணை இருபது துறைகளை யுடையது. முதலில் கூறப்படும் பத்தும் பெருமை விளைப்பன. பின்னர்க் கூறப்படும் பத்தும் துன்ப நிலையைத் தோற்றுவிப்பன. நாவலர் பாரதியார் அவர்கள் விழுப்ப வகை பத்தென்றும் விழும வகை பத்தென்றும் வகைப்படுத்தியுள்ளார்கள். இத்துறைகளால் பண்டைத் தமிழ் மக்களுடைய