பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 காட்டே அவர் கருத்துக்கு அரண் செய்யவில்லை என்பதை அவர் அறிந்திலர் போலும். ஐந்திரம் முற்பட்ட நூல், பாணினி 1 அதற்குப் பிற்பட்ட நூல். பாணினி தோன்றிய பின்னர் ஐந்திரம் வழக்கு இழந்துவிட்டது. பாணினிக்குப் பின்னர் தொல் காப்பியர் தோன்றியிருப்பின் செல்வாக்கில் உள்ள பாணினியையே கற்றிருப்பர். பாணினி நிறைந்த தொல்காப்பியன் என அழைக்கப்பட்டிருப்பர். பாணினி தோன்றப் பெறாததனால் அப்பொழுது வழக்கிலிருந்த எல்லோராலும் பயிலப்பட்ட ஐந்திரத்தைக் கற்றுப் புகழ் அடைந்தார் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்ற னர். இங்ஙனம் கூறுவதின் தருக்க நெறிப் பொருத் தத்தை வையாபுரியார் அறியத் தவறி விட்டார்" அங்ஙனம் அவர் தவறியுள்ளமையை அவர் காட்டும் சான்றே அவர்க்கு அறிவுறுத்தி நிற்கின்றது. தொல்காப்பியம் முற்பட்ட நூல். நன்னூல் அதற் குப் பிற்பட்ட நூல். "நன்னூல் உணர்ந்த மன் பேராசான்' என்றால், அவன் தொல்காப்பியர் நூலைக் கற்றிலன் என்று எங்ஙனம் கூற முடியும். ஆனால் நன்னூலுக்குப் பின் தோன்றிய தொன்னூலைப் பயின் றிலன் என்பது தானே போதரும் அன்றோ? 'தொல் காப்பியன் உணர்ந்த தொல் பேராசான்" என்றால் தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய நன்னூலைக் கற்றிருக்க முடியாது என்ற கருத்து புலப்படுமன்றோ? வகை அன்றியும் எடுத்துக்காட்டே பொருத்தமற்றது. தொல்காப்பியம் நன்னூலைக் காட்டிலும் பல யானும் சிறப்புடையது. ஆதலின் நன்னூல் தோன்றிய -1 பாணினி இயற்றிய நூலைப் பாணினி யென்றே அழைப்பது ஆகு பெயர்.