பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தொல்காப்பிய ஆராய்ச்சி யப்பெறும் பயனாம் கொடையைக் கருதுமிடத்து பாரி மாரிக்கு ஒப்பானவன் என்று கூறுவதனால் இது பயன் உவமமாகும். 'துடி இடை' என்னுங்கால் துடி (உடுக்கை) இருபுறமும் உயர்ந்து நடுவில் சுருங்கி இருப்பது போல் மகளிர் இடையும் சுற்றளவால் குறுகி இருப் பதை அறிவிப்பதனால் இது மெய் உவமம். பொன் அன்ன மேனி' என்னுங்கால் உடலின் தோற்றம் (மேனி ) பொன்னிறத்தை ஒத்திருக்கின் றது என்று அறிவிக்கின்றது. ஆகவே இது உரு உவமம். மெய் என்பது பருப்பொருளாம் வடிவம் ஆகும். உரு என்பது அருவப் பொருளாம் நிறம், அழகு முதலியனவற்றைச் சுட்டுவது. பொருளை ஒப்பிட்டுக் கூறுங்கால் கூறப்பட்ட நான்கனுள், ஒன்று பற்றியே ஒப்பிட்டுக் கூறவேண்டு மென்பதின்று. இரண்டும் மூன்றும் பற்றியும் ஒப்பிடலாம். காந்தள் அணிமலர் நறுந்தாது ஊதும்தும்பி கையாடு வட்டின் தோன்றும்" என்று கூறுங்கால் தும்பி வட்டிலோடு ஒப்பிடப்பட்டுள்ளது. தும்பிக் கும் வட்டிலுக்கும் ஒற்றுமை தொழில்,வடிவம். வண்ணம் எனும் மூன்றினாலும் அமைகின்றது. தும்பி வட்டிலைப்போல் உள்ளது என்று கூறுங்கால் வினை, மெய்,உரு மூன்றும் குறிக்கப்படுகின்றன. உவமை கூறுங்கால் உவமையாகவரும் பொருள் உவமிக்கப்படும் பொருளைவிட உயர்ந்ததாக இருத் தல் வேண்டும். ஒப்பிட்டுக் கூறுவதற்குரிய காரணங்கள் என்ன? சிறப்பு, நலன், காதல், வலி என்பன பற்றியே ஒப்