பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 என்னும் கூற்று தருக்க நெறிக்கு ஒத்த உண்மை யாகும். சிலர் 'ஐந்திரம்' என்பதனை 'ஐந்திறம்' என்று கொண்டு எழுத்து,சொல்,பொருள், யாப்பு, அணி என்ற ஐந்தின் தன்மைகளையும் கற்றுத்துறைபோகிய தொல்காப்பியர் என்று கூறுவர். தொல்காப்பியர் காலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் முப் பிரிவுகளே கொண்டனர் என்பது, "எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி" என்ற சிறப்புப் பாயிரத் தொடராலும், எழுத்து, சொல், பொருள் என்ற முப்பிரிவு கொண்டே தொல்காப்பியர் தம் இலக்கணத்தை யாத்துள்ளமை யாலும் நன்கு உணரலாகும். யாப்பும் அணியும் பொரு ளின் உட்பிரிவுகளாகக் கொள்ளப்பட்டன. ஆதலின் பனம்பாரனார் கூறும் 'ஐந்திரம்', ஐந்திறம் என மாற் றப்படுதல் பொருத்தமுடைத்தன்று; அம் மாற்றம் உண்மைச்சான்றுக்கு மாறுபட்டதாகிவிடும் தனைத் தேர்ந்து அறிவார்களாக. என்ப "தமிழ் மொழி வல்லார் வடநூற் புலமை பெறுவது எற்றுக்கு? தமிழ் இலக்கண நூல் யாக்கப் புகுந்த தமிழ்ப் புலவர் ஆரிய மொழி இலக்கணத்தைக் கற்க வேண்டிய இன்றியமையாமை யாது? அங்ஙனம் கற் றாலும் அதனைப் பெரும் சிறப்பாகக் கொள்ளல் வேண்டுமோ?" என்றெல்லாம் வினவுவோரும் உளர். ஒரு மொழியில் வல்லார் பிற மொழிகளிலும் வல்லு நராயிருத்தலால் ஒப்புமைப் படிப்பின் பயன்பெற்று அறிவிற் பரந்து சிறந்து விளங்குவர் என்பது பொது விதியாகும். பிற மொழிகளில் மிளிரும் பொதுவியல்பு