பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 தொல்காப்பிய ஆராய்ச்சி அறத்திற்கு முதன்மை கொடுத்தலே தமிழர் வாழ் வியற் சிறப்பு. "பயன் மட்டும் கருதினால் போதாது; பயன் வரும் வழியையும் கருதுதல் வேண்டும்" என்ற அடிப்படைக் கொள்கையிலேயே வாழவேண்டும். இலக்கியம் இலக்கியத்திற்காகவா? மக்களுக்காகவா எனின்? இலக்கியம் மக்களுக்காகவே என்பது தொல் காப்பியர் துணிபு. மக்களுக்காக இயற்றப்படும் இலக்கியம் அறநெறியைப் புகட்டுவதாகவே இருக் தல் வேண்டும். அறநெறியைக் கூறாதன இலக்கியம் ஆகா. அறநெறி கூறாத இலக்கியம் இயற்றுவோர் புலவரும் ஆகார். " மேலை நாட்டு இலோவெல் என்பாரும் பிரௌ னிங்கு என்பாரும் இக் கருத்தையே வலியுறுத்து கின்றனர். 1 மெய்யுணர்வின் உண்மையைக் கூறாத பாவின் புலவரை நான் மதிக்க மாட்டேன்" என்றும், மெய்யுணர்வே முதலில் கருதத் தக்கது. மெய் யுணர்வின் பயனாய்த் தோன்றிய பாவைப் பற்றிய ஆராய்ச்சி அதன் பின்னர் தான் " என்றும் கூறியுள் ளனர். (An Introducton to the sludy of Literature- Hudson-Page 94.) புலவர்கள் மக்களையும் மன்னரையும் வாழ்த்து தல் முன்னிலையாகக் கொண்டு அவர்கட்கு அறிவுரை கூறினர். அவ்வாறு அறிவுரை கூறுதல் புலவர்களின் தலையாய கடமையாகும். (We welcome the poet as teacher and moralist; because we know that in his hands the truths of life and conduct will acquire a higher potency and value - Hudson. அவ்வாறு அறிவுரை 1. No poem ever makes me respect its authors which does not in some way convey a truth of philosophy. - Lowel. Philosophy first and poetry which is its highest outcome, afterwards-Browning.