பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 அன்று வடவாரியர் இங்கு வந்திலர். ஆதலின் புகலிடம் தேடி வந்த ஆரிய மொழிச் சான்றோரிடம் பொல்லாங்கு காட்டாது முகமன் கூறி வரவேற்று அகமகிழ ஆகும் உதவிகளைச் செய்தனர். அதனால் இருசாராரும் நெருங்கிப் பழகி ஒருவர் மொழியை ஒருவர் பயின்றனர். ஓரினத்தார் மற்றோரினத்தாருடன் கலந்து உறவாடுங் கால் இரு சாராரின் மொழிகளும் பண்பாடுகளும் கலை களும் ஒன்றினுள் ஒன்று கலப்புறுவது இயற்கையே: தடுக்க முடியாததும் ஆகும். ஆதலின் ஆரியர்கள் தமிழர்களின் மொழி பண்பாடு கலை முதலியவற்றைத் தமதாக்கிக்கொண்டது போலவே, தமிழர்களும் ஆரியர் களின் மொழி பண்பாடு கலை முதலியவற்றைத் தம தாக்கிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் அடிமை கொள்ளல் வேண்டும் என்ற எண்ணம் இல்லாததால் பிற மொழி வெறுப்பும், பகைமையுணர்ச்சியும் தோன்ற வில்லை. ஆரியர்கள் தமிழகத்தில் செல்வாக்குத் தேட வேண்டிய நிலையில் இருந்ததால், தம் ஆரிய நூல்களைத் தமிழர்கள் கற்கலாகாது என்று தடுக்கும் கொள்கையை அஞ்ஞான்று மேற்கொண்டிலர். தமது மொழியில் புலமை பெற்ற தமிழர்களும் வேற்றுப் புது மொழியாம். ஆரியத்தை விரைந்து கற்றனர். புதிய மொழியில் புலமை பெறுதலைப் பெருமையாகக் கருதுதல் என்றும் உள்ள இயல்பு. ஆதலின் தொல்காப்பியரைச் சிறப் பித்துக் கூறப் புகுந்த பனம்பாரனார் தொல் காப்பியரின் வடமொழிப் புலமையை எடுத்துக்காட்டிச் சிறப்பித்துள்ளார். தொல்காப்பியரின் நூல் இலக்கண மாதலால் தொல்காப்பியரின் வடமொழி இலக்கணப் புலமையைச் சுட்டிக்காட்டுவான் வேண்டி "ஐந்திரம்" நிறைந்த 'தொல்காப்பியன். எனக் கூறியுள்ளார் என்று கருதுதல் வேண்டும்.