பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 281 புலவர்களும் அவ்வாறே கருதினர் எனின் தமிழ் மொழி நிலையை என்னென்பது? ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது. ஆட்சி மொழியும், கல்வி மொழியும், உரையாட்டு மொழியும் ஆங்கில மாகிவிட்டது. தமிழர்கள் ஆங்கிலம் ஒன்றையே கற்று, அதற்கே ஆக்கையும் ஆவியும் விட்டுத் தாங் களும் அயலவராகித் தமிழின் தொடர்பற்றுப் போனார்கள். தமிழில் உரையாடலும் தாழ்வெனக் கருதினர். இன்று நிலைமை மாறிவிட்டது; நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் உரிமை வேட்கையும் எவருக்கும் உரிய இன்றியமையா இயல்புகள் ஆகிவிட்டன. ஆங்கிலேயர் ஆட்சியால் ஒரே மாநிலமாய் ஆளப்பட்ட இந்தியா மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு இன்று ஆளப்படுகின்றது. ஆட்சி மொழியும் கல்வி மொழியும் மாநில மொழிகளாகவே இருத்தல் வேண்டும் என்ற கொள்கை வெற்றிபெற்றுவிட்டது. தமிழ் நாட்டின் எல்லாத் துறைகளிலும் தமிழே பயன்படுமொழியாக இருத்தல் வேண்டும் என்பதை மறுப்பார் இலர். மொழி வளர்ச்சி என்பதும் மக்களுக்கு எல்லாத்துறைகளிலும் மொழி பயன்படு தலில்தான் சார்ந்துள்ளது. மக்கள் தொடர்பின்றி மொழி வளர்தல் ஏது? (It is quite wrong to think of a language as an ideal entity evolving independently of men and pursuing its own ends. Language does not exist apart from the people who think and speak it; its roots go deep into the consciousness of each one of " us ; thence it is that it draws the sustenance enabling it to blossom in speech. Vendryes - Language Page 359.)