பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 45 பல கருத்துக்கள் நிலவுகின்றன. வெளி நாட்டாரின் வாணிகத் தொடர்பால் தமிழர் வரிவடிவ எழுத்தை அறிந்தனர் என்பர் ஒரு சிலர். அசோகன் கல்வெட்டு எழுத்துக்களைக் கொண்டே அவற்றிலிருந்து தமிழ் வரிவடிவ எழுத்துக்களை உருவாக்கிக் கொண்டனர் என்பர் ஒரு சாரார். இவையெல்லாம் பொருந்தாக் கூற்றுக்கள். உண்மைக்கு மாறுபட்டன. தமிழ் மொழி நூலார், வரி வடிவம் ஒலி வடிவம் எனும் இரண்டனையுமே எழுத்து என்று அழைப்பதால் மொழி உருவாக்கப்பட்ட போதே வரி வடிவ எழுத்தும் படைத்துக் கொள்ளப்பட்டது என்று அறியலாம். எழுத்தில் கொணர்ந்த பின்னர்தான் மொழியின் பயன் விரிவடைந்து நிலைத்த தன்மையைப் பெற்றது. ஆதலின் தமிழ் வரி வடிவத் தோற்றக்காலம் வரையறுத்து உரைக்க முடியாத மிகப் பழங்காலம் என்றுதான் கூறலாம். தொல்காப்பியர் காலமாம் கி.மு.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ் மொழிக்கு வரி வடிவம் ஏற்பட்டு இலக்கியங்களும் இலக்கணங்களும் பெருகத் தலைப்பட்டுவிட்டன என்பதைத் தொல்காப்பியமே மலை விளக்காய் அறிவுறுத்தி நிற்கின்றது. இந்திய மொழிகளின் வரி வடிவத் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முதற் காரணமாய் இருந்தது தமிழ் வரிவடிவங்களே. ஆகவே இந்திய மொழிகளின் வரி வடிவ எழுத்துக்களின் தாய் தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவமே எனில் மிகையாகாது. ஆரியக் குடும்பத்தைச் சார்ந்ததெனக் கூறப்படும் வட மொழியின் எழுத்தமைப்பு ஏனைய மேலை ஆரிய மொழிகளின் எழுத்தமைப்புமுறை போன்று அமையவில்லையே, ஏன்? அது தன் முறையை மாற் றித் தமிழ் முறையைப் பின்பற்றி அமைத்துக் கொண்டமையால்தான். தமிழ் எழுத்தமைப்பு