பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தொல்காப்பிய ஆராய்ச்சி ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் என்றார் ஆசிரியர். இது இயற்கையாக மூன்றெழுத்துச் சொற்களிடை யேயும் செயற்கையாக ல், ள் என்பன இரண்டும் மாறுதலுற்றும் வரும். எஃகு, கஃசு என்பனவற்றுள் இயற்கையாக வந்துள்ளது. கல் + தீது - கஃறீது என்றும், முள் + தீது முஃடீது என்றும் வருங்கால் செயற்கையாக வந்துள்ளதாம். இவ்வாய்த எழுத்தால் புது ஒலிகளை நாம் உண்டுபண்ணிக் கொள்ளலாம். அஃப, என் பதில் 'ப'வும், 'கஃசு' என்பதில் 'சு'வும், ' எஃகு' என்பதில் 'கு' வும் ஒலிக்கும் முறையைக் கூர்ந்து நோக்கி உணரலாம். தமிழில் இல்லாத F (யப்) ஒலியை ஆயுத எழுத்தின் துணைகொண்டு அமைத் துக்கொள்ளலாம்.(ஃபோர்டு (Ford) ] H ஒலியை 'ஃக' என்று அமைக்கலாம். இவ்வாறு வேண்டி யாங்குப் பயன்படுத்திப் புதிய ஒலிகளைப் படைத்துக் கொள்ளவும் இவ்வெழுத்து நற்கருவியாக இருப்ப தால்தான் இதற்கு "ஆய்தம்" என்று பெயரிட்டனர் போலும். அளபெடை : எழுத்துக்களை ஒலிப்பதற்குரிய நேரத்தையும் குறிப்பிட்டிருப்பது மொழியைப் பயன்படுத்தும் வகையில் அடைந்துள்ள முன்னேற்றமேயாகும். எழுத்தொலி நேரத்தைக் கணக்கிடுவதற்கு அடிப்படை அளவாகக் கண்ணிமைப் பொழுதையும் கைந் நொடிப் பொழுதையும் கொண்டனர். ஒரு முறை கண்ணிமைப்பதற்கோ கையை நொடிப்ப தற்கோ எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரத்தை மாத்திரை என்றனர். குற்றெழுத்தை ஒலிப்பதற்குரிய நேரம் ஒரு மாத்திரை என்றும் நெட்டெழுத்தை ஒலிப்பதற்கு இரண்டு மாத்திரை என்றும் வரையறுத்தனர். ஓர் எழுத்து இரண்டு