பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உயிர் எழுத்துக்கள் பிறக்கும் முறை : 67 பன்னிரண்டு உயிர்களும் மிடற்றின்கண் தோன்றிய வளியான் ஒலிக்கும் எனப் பொதுப் படக் கூறி விட்டுப் பின்னர் வகைப் படுத்திக் கூறு கின்றார். 'அ, ஆ' என்ற இரண்டு உயிர்களும் வாயைத் திறப்பதனால் ஒலிக்கும். 1 மேலைநாட்டு மொழியாராய்ச்சியாளரும் ' a ' பிறக்கும் முறைபற்றி இவ்வாறே கூறுகின்றனர். ஆனால் அங்கு ஒன்றே இருப்பதனால் சொற்களுக்கேற்ப மாறுதல் உற்று ஒலிக்கும். தமிழில் குறிலும் நெடிலுமாக அமைந்து ஒலிக்கும் முறையில் இரண்டும் ஒரு நிலைத்த தன்மையை அடைந்துவிட்டன. இ.ஈ.எ.ஏ.ஐ எனும் ஐந்து உயிர்களும் வாயைத் திறத்தலோடு மேல் வாய்ப் பல்லோடு அடிநா விளிம்பு உறுவதனால் பிறக்கும் (நூற்பா- பிறப்பியல்-4). உ, ஊ, ஓ, ஒள எனும் ஐந்து உயிர் எழுத்துக்களும் இதழை (உதட்டை)க் குவித்துக் கூறப் பிறக்கும். (நூற்பா-பிறப்பியல் 5) மெய்யெழுத்துக்கள் பிறக்கும் முறை : தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு.க வும் 'ங' வும் நாவின் அடிப்பாகமும் மேல் வாயின் அடிப்பாகமும் துணை புரியப் பிறக்கும். மொழியா ராய்ச்சியாளர் மிடற்றினம் (Guttural) என்று அழைப்பர். 'ச' வும் வும் நாவின் இடைப் பகுதியும் மேல் வாயின் இடைப் பகுதியும் துணை புரிய உண்டாகும். அண்ண இனம் (Paiatals) என்று அழைப்பர். 'ட' வும் 'ண ' வும் நாவின் நுனிப் பாகமும் மேல் வாயின் முற்பகுதியும் பொருந்தப் பிறக்கும். நாவினம் (Linguals) என்று அழைப்பர். 'அவற்றுள் அ ஆ ஆயிரண்டும் அங்காந்து இயலும்.' (தொல். எழுத்து-கு. 85,)