பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தொல்காப்பிய ஆராய்ச்சி அற்றிணையில் ஒருமை பன்மை உண்டு. பெய ரைப் பன்மைப் படுத்துங்கால் 'கள்' விகுதி சேர்த்தல் வேண்டும். 'கள்' விகுதி சேர்க்கவில்லை யேல் பன்மையை வினையைக் கொண்டு அறிய வேண்டும். மைய " " 'பால் பகா அஃறிணைப் பெயர்கள் பாற்பொது என்று நன்னூலாசிரியர் பவணந்தியார் கூறி விட்டார். நன்னூலை மட்டும் அறிந்த கால்டுவெல் அவர்கள் "தமிழ்ப் பெயர்ச் சொற்களின் எண், சிறப் பாக அஃறிணைப் பெயர்களின் எண், வரையறுக்கப் படுவதில்லை ; ஒரு பெயர் பன்மையா அல்லது ஒருமையா என்பது அப்பெயர் வரும் இடத்தையும் அது குறிக்கும். பொருளையும் நோக்கியே கொள்ளப் படும்' என்று கூறியிருப்பது உண்மை நிலைக்கு மாறானது. மக்கள் - கல்லா தவர் - பேச்சு வழக்கு அவ்வாறு கூறும்படி செய்துவிட்டது. . பெயர்களும் திணை பால் எண் அறிவிக்கும் விகுதிகளைப் பெற்று வருவதே தமிழ் இலக்கண மரபாக இருந்தது. ஆயினும் காலப் போக்கில் அம் மரபு சிதைந்து விட்டது. அலவன்' என்ற சொல்லில் ஆண்பாலை அறிவிக்கும் 'ன்' இருப்பினும், அச்சொல் உயர்திணை ஆண்பாலுக்குரியது அன்று ; அஃறிணை ஒன்றன் பாலுக்குரியது. 'மக்கள்' என்பதில் ள்' இருப்பினும் பெண் பாலன்று. 'நம்பி' என்பதில் னகர ஒற்று இல்லையாயினும் உயர்திணை ஆண்பாலுக்குரிய சொல்லாகும். ஆகவே தொல்காப்பியர் "இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய ஈற்றில் நின்றிசைக்கும் பதினோ ரெழுத்தும் தோற்றம் தாமே வினையொடு வருமே." என்று கூறியுள்ளார்.